காலத்தையும் அதன் செய்தியையும் அடையாளம் கண்டு கொள்ளுதல் Recognizing the Day and its Message 64-07-26M பிரான்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா 1 காலை வந்தனம், நண்பர்களே. நாம் நின்றவண்ணம் ஜெபிப்போம் அருமை தேவனே, இந்த வேகமான வாழ்க்கையின் மத்தியில், எங்களுக்கு நீர் அளித்திருக்கும் அடுத்த சில நிமிடங்கள் அல்லது மணி நேரத்தில், நாங்கள் உமக்கு துதியும், மகிமையும் செலுத்தவும், உமது வார்த்தைகளைப் போதிக்கவும், உம்மை இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளவும், இங்கு ஒதுங்கி வந்துள்ளோம். அதற்காகவே இன்று காலை நாங்கள் ஒன்று கூடியிருக்கின்றோம். தேவனே, இவ்விடம் வந்து செய்தியைக் கேட்க, தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்ட ஜனங்கள் இருப்பதற்காக உம்மை துதிக்கின்றோம். அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமும் சூழ்நிலையும் எவ்வாறிருப்பினும், அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமும் சூழ்நிலையும் எவ்வாறிருப்பினும், அவர்கள் இன்னமும் விசுவாசிக்கின்றனர். அவர்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். தேவனே, உமது மகத்தான சுகமளிக்கும் வல்லமைக்காகவும், உமது வாக்குத்தத்தங்களுக்காகவும் உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றோம். இந்த சாட்சிகளை நாங்கள் கேட்கும்பொழுது, எங்கள் இருதயம் எவ்வளவாக கொழுந்துவிட்டு எரிகின்றது மனுபுத்திரரின் மீது எல்லாவித துன்பங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆயினும் உமது கிருபையினாலும் வல்லமையாலும், நீர் அளித்துள்ள வாக்குத்தத்தத்தின்படி அவர்களை சுகமாக்கினீர். அவர்கள் இங்கு வந்து சாட்சி பகிர்ந்து தேவனுக்குத் துதி செலுத்துகின்றனர். அதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம் இக்காலத்திற்கென நீர் அளித்துள்ள செய்தியை நாங்கள் கேட்க அருள் புரியும். உமது வார்த்தையை இப்பொழுது நாங்கள் படிக்கும்போது , அதை புரிந்துகொள்ள எங்களுக்கு கிருபை நல்கும். எல்லா செயல்களிலும் உமது சித்தம் நிறைவேறுவதாக இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 2 என் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க அடுத்த வாரம் திங்கட்கிழமையன்று நான் அரிசோனாவுக்குச் செல்ல வேண்டும் நான் திரும்பி வந்து சில காலம் இங்கு தங்கியிருப்பேன். இது எனது விடுமுறை காலம் நான் டிசம்பர் மாதம் தொடங்கி ஜீலை மாதம் முடிய தொடர்ச்சியாக பிரசங்கம் செய்து வந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். கர்த்தருக்கு சித்தமானால், வேறு விசேஷ அழைப்பு எதுவுமில்லையென்றால் நான் இக்காலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டு வேட்டைக்குச் செல்வது வழக்கம். ஆயினும், நான் வேறெதாகிலும் செய்ய வேண்டுமெனும் உத்தரவை தேவனிடத்திலிருந்து பெறுவேனானால், என்திட்டத்திற்கு நான் அப்பொழுது முக்கியத்துவம் அளிப்பதில்லை. தேவனுடைய சித்தமே எப்பொழுதும் முதன்மை ஸ்தானம் பெற வேண்டும் என்பதே என் ஆவல். அவ்வாறே நீங்களும் ஆவல் கொண்டிருப்பதை நானறிவேன் எனக்குள்ள நெருக்கத்தை உலகம் அறியாது. எனவேதான் நம் ஆண்டவரும் சீஷர்களிடம், வனாந்திரத்துக்கு வந்து சற்று இளைப்பாறுங்கள் என்று கூறினார். இளைப்பாறுதலின் முக்கியத்துவத்தை நான் தினந்தோறும் உணருகின்றேன் நமது போதகர் சகோ, நெவில் அதை ஆமோதிப்பார். நமக்கு ஐம்பது வயது கடந்த பிறகு, நாம் சிறு பையன்கள் அல்ல என்பதை உணர்ந்து கொள்கின்றோம். 3 நாம் இப்பொழுது கேட்ட சாட்சிகளின் நிமித்தம் தேவனுக்கு நன்றி செலுத்துவோம். நேற்று என் மனைவி (wood) அம்மையாரின் வீட்டிற்கு சென்றிருந்தாள் அப்பொழுது அலபாமாவிலிருந்து வந்திருந்த சிலர், அங்கு நடந்த கூட்டங்களில் தேவன் செய்த மகத்தான கிரியைகளைக் குறித்து உரையாடிக்கொண்டிருந்தனராம். அனேக சிறு பிள்ளைகள் சுகம் பெற்றதைக் குறித்தும் இன்னும் மற்ற செயல்களைக் குறித்தும் அவர்கள் கூறினார்களாம். அவைகளை இப்பொழுது கூற நமக்கு நேரமில்லை. 4 இதுவரை நான் ஆயத்தம் செய்த செய்திகளில் அனைத்திலும் இப்பொழுது நான் கூறப்போகும் செய்தி மிகவும் கடினமானது என்பதை அறிவிக்க விரும்புகிறேன். இந்த வாரம் முழுவதும், என்னை அழைத்தவர்களின் வீடுகளுக்குச் சென்று வந்த பின்னர் சற்று நேரத்தை ஒதுக்கி, அறையினுள் சென்று, என்ன பேசவேண்டுமென்பதைக் குறித்து சிந்தனை செய்து வந்தேன். எனினும் என் சிந்தையில் எதுவும் எழவில்லை. நேற்று உஷ்ணம் அதிகமாக இருந்ததால், நான் அடித்தளத்துக்குச் சென்று, வேதாகமத்தைப் படிக்க முயன்றேன். ஆனால் எனக்கு உறக்கம்தான் வந்தது. நான் எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு, உறக்கத்தைக் கலைக்க முயன்றேன். பின்பு நான் வெளியே வந்து, உஷ்ணம் அதிகமாயிருந்த காரணத்தால், சட்டையைக் கழற்றிவிட்டு, படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். அந்நிலையில் ஒருவர் என்னைப்பார்த்து விட்டார். நேற்று இரவு நான் சார்லஸ்டவுன் வரை காரை ஓட்டிச்சென்று, இந்த ஆராதனையில் என்ன பேசவேண்டுமென்று ஆலோசனை செய்தவனாய், அந்தப் பட்டினத்தைச் சுற்றி வந்தேன். ஒரு முக்கியமான செய்தியை நான் பிரசங்கம் செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார் என்றும், அதை நான் அறிந்து கொள்ளக் கூடாதென்று சாத்தான் குறுக்கே நிற்பதாகவும் எனக்குத் தோன்றினது. சாத்தான் இதற்கென அரும்பாடு பட்டால், நானும் கர்த்தருக்காக் காத்திருந்து, அவர் வாசலைத் திறக்குமட்டும் தட்டிக்கொண்கொண்டே இருப்பேன் என்று தீர்மானம் செய்தேன். இன்று காலை8 மணியளவில், வேத புத்தகத்திலுள்ள ஒரு வசனம் என் கவனத்தைக் கவர்ந்து அது என்னை திகைக்க வைத்தது. அந்தச் செய்திக்கு ஆதாரமாயுள்ள அனேக வசனங்களையும் நான் படித்து முடித்தேன்.ஒருக்கால் இன்று காலை, சாத்தான் நமக்கு மறைக்க எத்தனித்த செய்தியை கர்த்தர் நமக்களிக்க விருப்பம் கொண்டுள்ளார் என்று எண்ணுகிறேன். 5 இந்த செய்தி மிகவும் நீளமானது. எனவே கர்த்தருக்குச்சித்தமானால், இன்றிரவும் அடுத்த ஞாயிறன்று இதை நாம் தியானிக்கலாம். உங்களை இருமுறை வரக் கூறுவது எனது விருப்பமில்லை . ஆனால் இன்னும் நமக்கு சொற்ப காலம் தான் உண்டு என்று எனக்குத் தோன்றுகின்றது. ஏதோ ஒன்று நிகழவிருக்கின்றது என்பது நினைவிருக்கட்டும். நாட்டின் சட்டம் ஒருக்கால் நம்மை தடை செய்யலாம் அல்லது சாத்தான் உங்களிடையே நகர்ந்து உங்களை சிதறடிக்கலாம்.ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே நிகழ்ந்து வருகின்றது. எனவே நாம் கூடிவரும் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆதாயப்படுத்திக்கொள்வோம். 6 ஓசியா திர்க்கதரிசியின் புத்தகத்திற்கு உங்கள் வேதாகமத்தைத் திருப்புங்கள். ஆறாம் அதிகாரத்திலிருந்து சில வசனங்களைப் படிக்கலாம். எழுந்து நின்று ஜெபம் செய்வோம். 7 அன்புள்ள தேவனே, இந்த புத்தகத்தை நாங்கள் கைகளில் ஏந்துவதற்கும் அபாத்திரர். இந்த புத்தகத்தை கையில் எடுப்பதற்கும் அதைப் பார்பதற்கும் கூட, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழ் காணப்படும் எந்த மனிதனுக்கும் தகுதியில்லை என்று நாங்கள் வேதத்தில் வாசிக்கின்றோம். ஆனால் ஆட்டுக்குட்டியானவருடைய சாயலுக்கு ஒப்பான ஒருவர் அங்கு வந்தார்... அவர் அடிக்கப்பட்டவராயிருந்தார். அந்த புத்தகத்தை வாங்க அவர் தகுதி பெற்றிருந்தார். அதன் முத்திரைகளை அவர் திறந்தார் இது மீட்பின் புத்தகம் இதிலுள்ளவைகளை வெளிப்படுத்த நாங்கள் உம்மையே நோக்கியிருக்கின்றோம். மீட்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் இப்புத்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ளனர். நாங்கள் வாழும் இக்காலத்தில், நாங்கள் வாகிக்கும் நிலையைக் கண்டுகொள்ள உதவி புரியும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள் நம்மைப் பீறினார், அவரே நம்மை குணமாக்குவார்: நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பின்பு அவர் நம்மை உயிர்பிப்பார் மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார். அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம். அப்பொழுது நாம் அறிவடைந்து கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்: அவருடைய புறப்படுதல் அருணோதயம் போல ஆயத்தமாயிருக்கிறது அவர் மழையைப் போலவும், பூமியின் மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப் போலவும் நம்மிடத்தில் வருவார். எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்து போகிறது. ஆகையால் தீர்க்கதரிசிகளைக் கொண்டு அவர்களை வெட்டினேன்: என் வாய்மொழிகளைக் கொண்டு அவர்களை அதம் பண்ணினேன் உன் மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப் போல் வெளிப்படும். பலியை அல்ல இரக்கத்தையும் தகன பலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறேன். அவர்களோ ஆதாமைப் போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினார்கள். கீலேயாத் அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம் , அது இரத்தக் காலடிகளால் மிதிக்கப் பட்டிருக்கிறது . பறிகாரரின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலை செய்கிற ஆசாரியரின் கூட்டம் காத்திருக்கிறது , தோஷமான காரியங்களையே செய்கிறார்கள். பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன், அங்கே எப்பிராயீமின் உண்டு, இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப் போயிற்று. யூதாவே உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஓசியா.6:1-11 8 காத்தராகிய இயேசுவே, நாங்கள் உம்மிடம் காத்திருக்கும் இந்நேரத்தில், எங்களுக்கு அளிக்க எத்தனித்துள்ள பொருளை பரிசுத்த ஆவியானவர் மூலம் இவ்வசனங்களிலிருந்து கிரகித்து எங்களுக்கு அளிப்பீராக! இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 9 இன்று காலை பேசுவதற்கென நான் தெரிந்து கொண்டுள்ள பொருள் "காலத்தையும் அதன் செய்தியையும் அடையாளம் கண்டு கொள்ளுதல்” என்பதாம். தேவனுடைய கடிகாரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் காண்பிக்கும் மணியை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். ஞாயிறு பள்ளி பாடம் ஒன்றை நான் போதிக்கப்போகிறேன். நாம் வாழும் காலம் என்னவென்பதை இதனின்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். நமது காலம் முடிவடையும் தருணத்தில், நாம் வந்திருக்கின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படியானால் நாம் வாழும் காலம், நேரம் என்ன வென்பதையும், நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய அடையாளம், செய்தி என்னவென்பதையும் அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். வேதத்தில் காணப்படும் ஏழு எக்காளங்களைக்குறித்து நான் பேசப்போகின்றேன் என்று சென்ற ஞாயிறன்று நான் உங்களிடம் கூறினேன். முத்திரைகள் வெளிப்பட்டவாறே இவைகளும் வெளிப்படுமென்று நான் எண்ணியிருந்தேன். இவை ஒவ்வொன்றும், முழங்கும் போதும், அச்சம் உண்டாக்கும் ஒரு செயல் நிகழுவதை நான் கவனித்துதேன். 10 ஏழு சபையின் காலங்களைக் குறித்து நாம் பேசினபோது, அது பிழையற்றது என்பதைப் பரிசுத்த ஆவியானவர் தாமே நம்மிடையே இறங்கிவந்து அதை நிரூபித்தார். அது செய்தித்தாள்களில் வெளியாகி நாடு முழுவதிலும் காணப்பட்டது. அவர் அதை சந்திரனிலும் வானங்களிலும் காண்பித்து, அது எவ்வாறிருக்கும் என்பதை அனேக மாதங்களுக்கு முன்பே நமக்கு வெளிப்படுத்தினார். ரோமாபுரி சபையின் குருத்துவம் பாலஸ்தீனாவுக்குச் சென்ற போது, அச் சமயம் நாடுகள் அடைந்திருந்த நிலையையும் நமக்கு வெளிப்படுத்தினார். பேதுருவுக்கு அடுத்தபடியாக பாலஸ்தீனாவுக்குச் சென்ற முதல் போப்பாண்டவர் இவரே என்கின்றனர். பேதுருதான் முதல் போப்பாண்டவர் என்று அவர்கள் உரிமை பாராட்டுகின்றனர். இந்த கூடாரத்தில், ஏழு முத்திரைகளின் கீழ் அடங்கியுள்ள இரகசியம் வெளிப்படுமுன்னர், கற்பலகையில், நான் ஏழு சபை காலங்களை வரைந்தேன். நான் வரைந்தது என்னவென்பது எனக்கே தெரியாது. ஏனெனில் நான் ஒரு தரிசனத்தைக் கண்டு, அதில் காணப்பட்டபடியே வரைந்தேன். இது நிகழந்து ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பிறகு, கர்த்தர் இதை சந்திரனிலும் சூரியனிலும் காண்பித்து, தேசத்து செய்தித்தாள்களின் மூலம் நாடு முழுவதும் அறியச் செய்வாரென்று அப்பொழுது நான் அறியவில்லை, லவோதிக்கேயா காலத்திற்கு எடுத்துக்காட்டாக சந்திரன் முழுமையாக இருளடையும் என்று நான் சற்றேனும் நினைக்கவில்லை. ஆறு காலங்களைச் சித்தரிக்கும் படங்களை மாத்திரமே நீங்கள் செய்தித்தாள்களில் கண்டீர்கள். ஏனெனில் லவோதிக்கேயா சபையைச் சித்தரித்தது முழுமையாக இருளடைந்து விட்டது. தேவன் வானங்களில் காண்பித்த இதன் ஆவிக்குரிய அர்த்தத்தை நீங்கள் கவனிப்பீர்களானால்...நான் கற்பலகையில் வரைந்தபோது, சிறிது வெளிச்சம் உள்ளதாகக்காண்பித்தேன். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அழைக்கப்படுவதற்கு சற்று முன்னர் உள்ள காலத்தையே அது சித்தரித்தது. ஆனால் கர்த்தர் இதை வானங்களில் காண்பித்த போது, அது முழுவதும் இருளடைந்திருந்தது. ஒருக்கால் லவோதிக்கேயா சபையிலிருந்து கடைசி நபர் அழைக்கப்பட்டுவிட்டார் என்பதை இது காண்பிக்கின்றதா என்ன? எனக்குத் தெரியாது. அதைக் குறித்து ஒரு பிரசங்கமே நிகழ்த்தலாம். 11 கவனியுங்கள், ஏழு முத்திரைகளைக் குறித்து நான் பிரசங்கிக்கும் முன்பு, அது அவ்விதமாயிருக்கும் என்று நான் அறியவேயில்லை. நான் ஜெபர்ஸன்வில் கூடாரத்திலிருந்தபோது, அவர் என்னை அரிசோனாவிலுள்ள டுக்ஸனுக்கு அனுப்பினார். அங்கு நேரிடவிருப்பது என்னவென்று அவர் எனக்கு வெளிப்படுத்தினவைகளை. நான் உங்களிடம் அறிவித்துச் சென்றேன். அது நிகழ்ந்த சமயம் அங்கிருந்த ஒரு நபர் இப்பொழுது நம்மிடையே அமர்ந்திருக்கிறார். ஏழு தூதர்கள் வருவார்களென்று அவர் என்னிடம் கூறினார். அவர் கூறியவாறே நிகழ்ந்தது. நான் இங்கு வரைந்து காட்டின் விதமாக, கூர்நுனிக் கோபுர(pyramid) வடிவில் அமைந்த ஒளிவட்டம் ஒன்று தென்பட்டது. செய்தித்தாள்களும், பத்திரிகைகளும் அதன் புகைப் படத்தை வெளியிட்டு, இச்செய்தியை நாடு முழுவதும் பரப்பின. அரிசோனாவிலுள்ள டுக்ஸனில், அந்த ஏழு தூதர்கள் நின்ற இடத்திலிருந்து அது எழும்பி, இருபத்தாறு மைல் உயரம் சென்றது. அதன் அகலம் முப்பது மைல். நாடு முழுவதும் அது தென்பட்டது. நாம் வாழும் நேரத்தின் ஆவிக்குரிய முக்கியத்துவத்தை உங்களுக்கு வெளிப்படுத்தவே அது அறிவிக்கப்பட்டதேயன்றி, மற்றப்படி வேறல்ல இதை தொடர்ந்து வந்த செய்தி ஏழு முத்திரைகளைத் திறந்து வேதத்தில் மறைந்து கிடந்த பரம ரகசியங்களை வெளிப்படுத்தினது இப்போதகங்களை உலகம் கடூரமாக எதிர்த்து அவை தவறு என்கின்றது 12 அன்றொரு நாள் அரிசோனாவிலுள்ள சிலர் என் செய்திகள் கொண்ட ஒலி நாடாக்களை மாற்றி அமைத்து நான் கூறாதவைகளைக் கூறினதாக நிரூபிக்க முயன்றனர். வேதம் இவ்வாறு கூறுகின்றது "...இடறல்கள் வாரமல் போவது கூடாத காரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ அவனுக்கு ஐயோ! அவன் இந்த சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் எந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டு போவது அவனுக்கு நலமாயிருக்கும்.” லூக். 17:1-2  மேலும் வேதம் இவ்வாறு உரைக்கின்றது.  "..ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன் மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாக்கிலும் எடுத்துப் போட்டால், ஜீவ புத்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார்.வெளி.22:19 அளிக்கப்பட்ட வார்த்தைக்கு மக்கள் தங்கள் சுயவியாக்கியானங்களை அளித்து, அது கூறாதவைகளைக் கூறியதாக அறிவிக்க முற்படுகின்றனர் அது அவருடைய வார்த்தை , அதற்காக நான் போராடினால் அவர் போராட முடியாது. அவர் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள நாம் அனுமதிப்போம் அதை காக்க வேண்டிய பொறுப்பு அவருடையது. 13 சென்ற ஞாயிறன்று, நான் யூதரின் பண்டிகைகளைக்குறித்து பிரசங்கம் செய்தேன். பெந்தேகோஸ்தே பண்டிகைக்கும் எக்காளபண்டிகைக்கும் இடையே நீண்ட இடைவெளி உண்டாயிருந்தது சரியாக ஐம்பது நாட்கள். பெந்தேகோஸ்தே என்பதற்கு ஐம்பது என்று பொருள். அறுவடையின் முதற்பலனை அவர்கள் அங்கு கொண்டு வந்தனர். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் மேல் பொழிந்ததன் விளைவால் உண்டான முதற் பலன்களுக்கு முன்னடையாளமாக, உலகப்பிரகாரமான முதற்பலன்களை இஸ்ரவேல் ஜனங்கள் அந்தப் பண்டிகையின் போது கொண்டுவந்தனர். இந்த ஐம்பது நாட்களை புறஜாதியார் ஏற்றுக் கொண்டனர். ஏனெனில் தேவன் தமது நாமத்திற்கென புறஜாதியாரிலிருந்து ஒரு கூட்டம் ஜனங்களை அழைத்தார். அந்த நீண்ட பெந்தேகோஸ்தே பண்டிகையைக் குறித்து நாம் தியானித்தோம். இந்த ஐம்பது நாட்களில் ஏழு ஒய்வு நாட்கள் உண்டாயிருக்கும். பெந்தேகோஸ்தே பண்டிகையின்போது அவர் தமது நாமத்திற்கென புறஜாதியாரிலிருந்து ஒரு கூட்டம் ஜனங்கள் அழைத்த ஏழு சபையின் காலங்களுக்கு இந்த ஏழு ஒய்வு நாட்கள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. ஏழு ஒய்வு நாட்களின் முடிவில் பாவநிவாரண நாள் ஆசரிக்கப்பட்டது. அதுதான் ஏழு எக்காளங்கள். இந்த ஏழு எக்காளங்களும், பாவ நிவர்த்திக்காக மனந்திரும்பும் நாளுக்கு அவர்களை ஒன்று கூட்டி சேர்க்க முழங்கப்பட்டன. அப்படியானால் ஏழு எக்காளங்கள் இஸ்ரவேலருக்கே உரியது. 14 இதனால்தான் ஏழு எக்காளங்களைக் குறித்து பிரசங்கம் செய்ய கர்த்தர் என்னை அனுமதிக்கவில்லை. ஏழு எக்காளங்களின் பேரில் நான் பிரசங்கம் செய்யப் போகிறேன் என்று அறிவிக்க ஆயத்தமான போது, ஏதோ ஒன்று என்னை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. பில்லியும் மற்றவரும். இதற்கென முயற்சி எடுத்து, குளிர் கட்டிடம் ஒன்றை அடுத்த வாரம் வாடகைக்கு எடுக்கவேண்டுமென்று எண்ணியிருந்தனர். ஆனால் ஏதோ காரணத்தினால் எக்காளங்களின் பேரில் பிரசங்கம் நிகழ்த்த கர்த்தர் என்னை அனுமதிக்கவில்லை. நான் வியப்புற்றவனாய் என் மனைவியிடம் . "இதைக் குறித்து ஜெபிக்கப் போகிறேன்” என்று கூறினேன். நான் தேவனுடைய சமுகத்தில் உத்தமமாய் முழங்காற்படியிட்டு வேண்டினேன். அப்பொழுது அவர் , அந்த ஏழு எக்காளங்களும் ஆறாம் முத்திரையின் கீழ் முழங்கினவென்றும், அதை நான் ஏற்கனவே பிரசங்கம் செய்து விட்டேன் என்றும் வெளிப்படுத்தினார். அது இயற்கைக்கு மேம்பட்ட தேவனுடைய கரம் என்பாதை கவனிக்கவும். அது இஸ்ரவேலருக்கே உரியது. ஆறாம் முத்திரையின் கீழ் அதை நாம் சிந்தித்தோம். அது யூதரின் உபத்திரவகாலமாகும். 15 ஏழாம் தூதனின் செய்தி முத்திரைகளின் இரகசியங்களை வெளிப்படுத்தும். முதலாம் மணி நேரத்தில் அமர்த்தப்பட்ட வேலையாட்கள் பெறும் கூலியையே, பதினோறாம் மணி நேரத்தில் அமர்த்தப்பட்ட புறஜாதி வேலையாட்களும் பெறும்படி, இந்த புறஜாதி வேலையாட்களுக்கு அது அழைப்பு விடுக்கிறது (மத்தேயு 20.1-16 வாசிக்கவும்). இயேசு இந்த உவமையைக் கற்பித்தார். நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிக்கு சம்மதித்து சில வேலையாட்கள் அறுவடைக்குச் சென்றனர். பின்பு பகல் வேளையில் வேறு சில வேலையாட்கள் வேலை செய்ய அங்கு சென்றனர். முடிவில் பதினோராம் மணி வேளையில் (அது தான் நாளின் கடைசி மணி நேரம்) வேறு சிலர் சென்றனர். முதலாம் மணி நேரத்தில் அமர்த்தப்பட்ட வேலையாட்கள் பெற்ற கூலியையே பகல் நேரத்திலும், பதினோராம் மணி நேரத்திலும் அமர்த்தப்பட்டவர் பெற்றனர். அது மிகவும் அழகாகப் பொருந்துகின்றது. பெந்தேகோஸ்தே நாளில் முதலாம் மணி நேரத்தின் தூதர்கள் தேவனுடைய வார்த்தையுடன் தோன்றினர். அவர்களுக்குப் பின்பு இருளின் காலங்கள் தோன்றி, அவர்களைதத் தடை செய்தன. பின்னர் மத்தியான வேளையில் லூதரும் வெஸ்லியும் எழும்பினர். தொடக்கத்தில் அவர்கள் பெற்றதையே இக்காலத்தவரும் பெற ஒரு சாயங்கால செய்தி தோன்ற வேண்டும். இந்த செய்தி இவர்களைத் தொடக்கத்திலிருந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும். 16 சென்ற வாரம் நான் கண்ட தரிசனம் நினைவிருக்கிறதா? அதைக்குறித்து நான் சிந்தனைகூட செய்யவில்லை.நான் அமர்ந்திருந்து வெளியே நோக்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது தரிசனத்தில் மணவாட்டியைக் கண்டேன். அருகில் எழுந்த ஒரு சப்தம் என்னுடன், "இது மணவாட்டியின் அணிவகுப்பின் தோற்றம் (preview)” எனக் கூறினது. அவள் அங்கு வந்தாள். அவள் மிகவும் அழகாவும் இளமையாகவும் காணப்பட்டாள். மணவாட்டி அங்கத்தினர் நேர் பாதையில் நடந்து சென்றனர். அது இராணுவ அணிவகுப்பு போன்றல்ல. கெளரவமுள்ள பெண்கள் நடக்கும் விதமாய் அவர்கள் அழகாக நடந்து என் இடதுபுறத்தை அடைந்தனர். பிறகு அவர்கள் என்னைக் கடந்து சென்று, என் பார்வையினின்று அப்பால் சென்றனர். அவர் பின்பு என்னை வலதுபுறம் திரும்பச் செய்து, ஒவ்வொரு சபை காலத்திலும் தோன்றிய சபையை எனக்குக் காண்பித்தார். அவர்கள் மிகவும் கீழ்த்தரமாகக் காணப்பட்டனர். கடைசியாக வந்தது, கடைசி சபை காலத்தின் சபையாகும். அதற்கு ஒரு மந்திரவாதி தலைமை வகித்தாள். அவர்கள் யாவரும் ஆபாச உடையணிந்திருந்தனர். காண அது மிகவும் அருவருப்பாயிருந்தது. நவீன ராக் அண்டு ரோல் இசைக்கு இவர்கள் அடியெடுத்து வைத்து சென்றனர். முன் பாகத்தை மறைக்க அவர்கள் சாம்பல் நிறம் கொண்ட காகிதத்தைப் பிடித்திருந்தனர். சல்லடை போன்று பின்னியுள்ள அரை பாவாடை (hula skirt) ஒன்றை அவர்கள் அணிந்திருந்தனர். இடுப்பிலிருந்து மேல் பாகம் முழுவதும் அவர்கள் நிர்வாணமாகத் தோற்றமளித்தனர். சாம்பல் நிறம் மாய்மாலத்திற்கு அறிகுறி. அது வெள்ளை நிறமுமல்ல. அது வஞ்சிக்கும் ஒரு நிறம். “அது தான் சபை” என்று அவர் கூறின மாத்திரத்தில் என் இருதயம் தளர்ந்தது. "இது தான் நாம் கிறிஸ்துவுக்கு அளிக்கும் மணவாட்டியா?” என்று மனதில் எண்ணினேன். கிறிஸ்துவுக்கு மணவாட்டியை ஆயத்தப்படுத்த மனிதன் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து, முடிவில் இத்தகைய கீழ்த்தரமான, நடத்தை, கெட்ட, அசுத்தமான வேசியா கிறிஸ்துவுக்கு மணவாட்டியாக அமைவது ! என நான் மிகவும் வேதனைப்பட்டேன். நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தை அவள் கடந்தபோது, ஒரு காகிதத்தை அவளுக்கு முன்பாக பிடித்துக் கொண்டு, நவீன நடனங்களில் உடலைத் திரித்து, அங்க அசைவைச் செய்வது போன்று, அவளும் செய்து நடனமாடிச் சென்றாள்.மாத்திரமல்ல, இனச் சேர்க்கையில் நிகழும் அசைவை பாவனை செய்தவாறு அவள் நடந்து சென்றாள். இதற்கெல்லாம் நான் பொறுப்பாளியல்ல. நான் கண்டதை அவ்விதமே எடுத்துரைக்கிறேன். அதற்கு தேவன் சாட்சி. அதுதான் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சபை.அவள் எங்களைக் கடந்து சென்றபோது, அவள் பின்பாகம் முழுவதும் மறைக்கப்படாமல் நிர்வாணமாய் இருந்தது. அதைக் கண்டதும் எனக்கு மயக்கம் வந்தது. 17 பின்பு அவர், " மணவாட்டி மறுபடியும் அணிவகுத்து வரப்போகின்றாள் ” என்று அறிவித்தார். அப்பொழுது மணவாட்டி நடத்தை கெட்ட அந்த சபையின் பின்னால் அணிவகுத்து வந்தாள். நான் தொடக்கத்தில் கண்ட மணவாட்டியைப் போன்றே இவளும் காட்சியளித்தாள். மணவாட்டி ஒருவள் இருக்கிறாள் அவள் நான் தொடக்கத்தில் கண்ட மணவாட்டியைப் போன்றே ஒழுக்கமான உடையணிந்திருப்பாள் என்று நான் அறிந்தபோது, என் மனம் மகிழ்ச்சியினால் துள்ளியது. அவள் தேவனால் அழைக்கப்பட்டவள். அது முற்றிலும் உண்மை . இல்லையேல், நான் கண்ட தரிசனங்கள் அனைத்தும் தவறாக இருக்கவேண்டும். அவர் இதுவரை என்னிடம் கூறின யாவும் உண்மையென்றும், அவை அவ்வாறே நிறைவேறின என்றும் எல்லோரும் அறிவார்கள். நவீன சபையின் அசுத்தமான நிலைமையை நீங்கள் காணமுடிகிறதல்லவா? ஆயினும் அவள் தன்னை சபையென அழைத்துக் கொள்கின்றாள். 18 என் அருமை சகோதரன் ரட்டல் (Bro- Ruddell), திராட்சை செடியின் சத்தை உறிஞ்சும் புழுவாக அதை தரிசனத்தில் கண்டதாக என்னிடம் கூறினார். இக்காலத்து சபைகளின் நிலைமையையும், ஆவி அங்கெல்லாம் சிறிது சிறிதாக தணிந்து போகிறதையும் அவர் கண்டு மனம் நொந்தார். அனேக இடங்களிலிருந்து என்னைக் காண வரும் போதகர்களும், "சகோதரன் பிரான்ஹாமே, சபைகளுக்கு என்ன நேர்ந்துள்ளது”? என்று கேட்கின்றனர். சகோ.ராட்டலும் , "இந்த சபைகள் சாத்தானின் ஆவியைக் கொண்டா வாழ்கின்றன"? என்று வினவினார். அதற்கு நான் "இல்லை, திராட்சை செடியின் சத்தை உறிஞ்சுவதால் அந்தப் புழு வாழ்ந்து கொண்டிருக்கின்றது”. என்றேன். 19 எலுமிச்சை வகை செடியை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஒரு எலுமிச்சை செடி, ஆரஞ்சு செடியில் வளரக்கூடும். ஆரஞ்சு செடியிலுள்ள சத்தைக்கொண்டு அது வளர்ந்தாலும், ஆரஞ்சு பழங்களை அது தராது. அவ்வாறே சபை என்று தன்னை அழைத்துக்கொள்வது, மார்க்கம் என்னும் பெயராலும், சபை என்னும் பெயராலும் வாழ்ந்துவரும் ஒட்டுக் கிளையாகும். கத்தோலிக்கர்களும், பிராடஸ்டண்டுகளும், திராட்சை செடியிலுள்ள சத்தை உறிஞ்சி, தங்களுக்குரிய கனிகளை மாத்திரம் ஈனுகின்றனர். ஏனெனில் அவர்கள் தன்மை மாறவில்லை. அவர்கள் தேவனுடைய "முன்குறிக்கப்படுதல் ” என்னும் திட்டத்தில் இடம் பெறவில்லை . எனவே அவர்கள் தேவனுடைய வார்த்தையை மறுதலித்து, அத்தகைய கனிகளை ஈனுகின்றனர். உண்மையான ஆரஞ்சு மரம், அந்த மரத்தில் ஆரஞ்சு பழங்களைத் தரவேண்டுமென்றே முன் குறிக்கப்பட்டுள்ளது. நானே திராட்சை செடி "நீஙங்கள் கொடிகள் ” என்று இயேசு கூறினார். அந்த திராட்சை செடியில் மற்றும் ஒரு கிளை தோன்றுமானால் அதுவும் அந்த மரத்துக்குரிய திராட்சை பழங்களைத்தான் தரும். இவையெல்லாம் பழைய நிலைக்கு திரும்பவேண்டும். இந்த திராட்சை செடியின் முடிவு காலத்தில் அவை பழைய நிலைக்குக் கொண்டுவரப்படவேண்டும். சாயங்காலத்தில் வெளிச்சம் தோன்றி, அவைகளைப் பழுக்கச் செய்யும் . ஆனால் அவை மூல திராட்சை செடியிலிருந்து தோன்றுமேயன்றி, அதில் ஒட்டுப் போடப்பட்ட ஸ்தாபனமாய் இராது. அது மூல வார்த்தையை மறுபடியும் தோன்றச் செய்யும். 20 இது சாயங்கால நேரத்தில் நிகழும் சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும். அதைப் பழுக்கச் செய்ய வெளிச்சம் அவசியம். வேதவாக்கியங்கள் எவ்வளவு பிழையற்றவை என்பதை கவனிக்கவும். ஒரு நாள் உண்டு. அது பகலும் அல்ல, இரவும் அல்ல சூரியனைத் தவிர வேறெதுவும் பழங்களைப் பழுக்கச் செய்யாது. நீங்கள் எவ்வளவுதான் பிரசங்கம் செய்தாலும் வேறென்ன செய்தாலும் அவைகள் பழுக்க முடியாது. அவைகள் வெளிப்படமுடியாது. "நானே உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்று சொன்னவரைத் தவிர, வேறு யாரும் அதை உறுதிபடுத்த முடியாது. இக்காலத்தில் நிகழுமென்று அவர் முன்னறிவித்துள்ள யாவையும் பழுக்கச் செய்து , ,உறுதிபடுத்த நிருபிக்க ஒரு வல்லமை பரிசுத்த ஆவியானவர் தாமே- வரவேண்டியது அவசியமாயுள்ளது. சாயங்கால வெளிச்சம் அதை நிறைவேற்றும்.என்னே ஒரு சமயம்!. 21 முதலில் அணிவகுத்து சென்ற மணவாட்டியைப் போன்றே கடைசியில் சென்ற மணவாட்டியும் காட்யளித்தாள். அணிவகுப்பின் போது அவள் தவறுதலாக காலடி எடுத்து வைத்து அணியினின்று அகன்று செல்வதைக் கண்டேன். அவளை நான் மறுபடியும் அணிவகுப்புக்குள் இழுத்து வந்து, சரியான காலடி வைக்க உதவினேன்.நாம் வாழும் காலத்தைக் குறித்து இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். ஆறாம் அதிகாரம் முதலாம் வசனத்தில் ஓசியா "கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்” என்கிறான். அவர்கள் சிதறடிக்கப்படுவார்கள் என்று அவன் கூறினான். அவ்வாறே அவர்கள் சிதறடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கர்த்தரிடத்தில் திரும்புவார்கள் என்றும், காத்தர் அவர்களை குணமாக்கி, அவர்கள் காயங்களைக் கட்டுவாரென்றும் அவன் கூறினான். அதுவும் அவன் கூறியபடியே நிகழ்ந்தது. எசேக்கியேல் 37ல், பள்ளத்தாக்கில் நிறைந்திருந்த உலர்ந்த எலும்புகள் ஒன்று சேர்ந்தது போன்றது இது எசேக்கியலும் கூட அவர்கள் திரும்பி வருவதைக் கண்டான். "இரண்டு நாட்களுக்கு பின்பு அவர் நம்மை ஏற்றுக்கொண்டு நம்மை உயிர்ப்பிப்பார் '' என்று ஓசியா கூறுவதைக் கவனியுங்கள். "உயிர்ப்பித்தல் '' என்னும் பதம் உயிரோடொழுதலை இங்கு குறிப்பிடவில்லை. அது ஒரு "எழுப்புதலைக்” குறிக்கின்றது. இரண்டு நாட்களுக்குப் பின்னர். அவர் நம்மிடையே ஒரு எழுப்புதலை உண்டாக்குவார் என்பதே அதன் அர்த்தம் , "அவர் நம்மை சிதறடித்து குருடாக்கி பீறின பின்பு மூன்றாம் நாளில் அவர் நம்மை மறுபடியும் எழுப்புவார் " (எழுப்புதலை உண்டு பண்ணுவார்) என்பதாக அவன் கூறுகின்றான். நாம் காணவேண்டுமென்று கருதியே யூதர்கள் குருடாக்கப்பட்டனர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் ஒரு தேசமாக பீறப்பட்டு, சிதறடிக்கப்பட்டனர் நாம் மேசியாவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் மேசியாவைப் புறக்கணிக்க நேர்ந்தது. அதன் விளைவாக, அவர் நாமத்திற்கென புறஜாதியாரிலிருந்து ஒரு கூட்டம் ஜனங்கள் அழைக்கப்பட்டனர். அம் மனிதன் (இயேசு) தோன்றினார், ஸ்திரீ அவர் நாமத்தைத் தரித்துக் கொண்டாள். ஆனால் புறஜாதியாரில் குருடாக்கப் பட்டவர்களோ, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை ஞானஸ்நானத்தில் தரித்துக் கொள்ளவேண்டும் என்பதை காணக் கூடாதவராய் இருக்கின்றனர். அது மிகவும் வருத்தமானது, ஆயினும் அது அவ்வாறே நிகழவேண்டும். முன் குறிக்கப்பட்டவர் மாத்திரமே அதை அறிந்துகொள்ள முடியும். நீங்கள் முன் குறிக்கப்படாவிடில் அதை அறிந்துகொள்ள இயலாது. இயேசுவே மேசியா என்பதை யூதர்கள் கண்டுகொள்ள முடியவில்லை. ஆயினும் அவர்கள் புகழ் வாய்ந்த மேதைகளும், வேத பாண்டித்யம் பெற்றவருமாயிருந்து, நாம் படிக்கும் அதே வேதாகமத்தையே அவர்களும் படித்து வந்தனர். இயேசு மேசியா என்னும் சத்தியம் நமக்கு வெளியான பின்பு, அதை நாம் தெளிவாகக் காணமுடிகிறது. ஆனால் அவர்களோ அதை காணமுடியவில்லை. இன்றும் கூட அவர்கள் அதை காணமுடியவில்லை. அவர்கள் குருடாக்கப்படுவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. அதுபோன்று, இன்றைய ஸ்தாபனங்களும் குருடாக்கப்பட்டு, சாயங்காலச் செய்தியை புறக்கணிக்கும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தல் 3ம் அதிகாரம் அவ்விதம் கூறுகின்றது: "நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத் தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருப்பதை அறியாமல்.....” (வெளி. 3:17) 22 நான் கண்ட அத்தரிசனத்தில் சபையின் நிலையைக் கவனியுங்கள். கர்த்தராகிய இயேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும்! அவள் நிர்வாணியாயிருந்தாள் என வேதம் கூறுகின்றது. லவோதிக்கேயா சபை நிர்வாணமாயுள்ளது. அன்றிரவு நான் கண்ட தரிசனத்திலும் அவள் நிர்வாணியாயிருந்தாள். கர்த்தர் நமக்கு வெளிப்படுத்தி தருபவைகளுக்காக நாம் போதிய அளவு அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இல்லை என்று எண்ணுகின்றேன். அவள் நிர்வாணியாயிருந்தாள் என அத்தரிசனம் காண்பித்தது, அவளோ அதை அறியாமலிருந்தாள். 23 புறஜாதியார் உள்ளே வருவதற்கென எவ்வாறு இஸ்ரவேலர் குருடாக்கப்பட்டனரோ, அவ்வாறே மணவாட்டியின் எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழந்து, இஸ்ரவேலர் எக்காளப்பண்டிகைக்கு வரவேண்டுமெனக் கருதி புறஜாதியார் குருடாக்கப்பட்டுள்ளனர். இஸ்ரவேலர் "அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்பார்கள்" என்று. ஒசியா கூறியதாக நாம் முன்பு படித்தோம்.“பிழைப்பது” என்பது நித்திய ஜீவனைக் குறிக்கின்றது. "சுகபோகமாய் வாழ்பவள் உயிரோடிருக்கும் போதே செத்தவள்” தற்பொழுது இஸ்ரவேலர் சத்தியத்துக்கும் பெந்தேகோஸ்தே பண்டிகைக்கும் மரித்தவராகக் காணப்பட்டாலும், அவர்கள் மறுபடியும் ஜீவனைப் பெறுவார்கள் என்று தேவன் வாக்களித்துள்ளார். 24 இரண்டாம் வசனத்தில், "இரண்டு நாட்கள்” என்று குறிக்கப்பட்டுள்ளது, 24 மணி நேரம் கொண்ட நாட்களையல்ல. இது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவமாகும். தேவனுடைய பார்வையில் இரண்டு நாட்களையே அது குறிக் கின்றதுஅதாவது இரண்டாயிரம் ஆண்டுகள். அது நிகழ்ந்து2700 ஆண்டுகள் கடந்ததுவிட்டன. ஓசியா இதை கி.மு. 780ல் - அதாவது ஏறக்குறைய 2700 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினான் "இரண்டு நாட்கள் கழித்து" - அதாவது மூன்றாம் நாளில்- "அவர் நம்மை எழுப்புவார்” என்றும், "அவருடைய பார்வையில் நாம் பிழைத்திருப்போம்” என்றும் அவன் கூறினான். நாம் வாழும் நாட்களிலேயே எக்காளப் பண்டிகை தோற்றமளிக்கும் என்பதுதான் அது. யூதர்கள் சிதறடிக்கப்பட்டு, குருடாக்கப்பட்டு, இப்பொழுது மறுபடியும் ஒன்று சேர்க்கப்பட்டு விட்டனர். எனவே நாம் மூன்றாம் நாளின் பிற்பாகத்தில் இருக்கின்றோம். உங்களுக்குப் புரிகின்றதா? அவர்கள் பாலஸ்தீனா தேசத்திலிருந்து உலகின் எல்லா பாகங்களிலும் சிதறடிக்கப்பட்டனர். மேசியாவை அவர்கள் புறக்கணிக்கவேண்டும் என்பதற்காகவே அவர்கள் குருடாக்கப்பட்டனர். தற்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் ஒன்று சேர்ந்து, கொள்ள பண்டிகைக்கென ஆயத்தமாகி, இயேசுகிறிஸ்து செலுத்தின பலியை உணர்ந்துகொள்ளும் தருவாயில் இருக்கின்றனர். சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றும், ஆணியால் கடாவப்பட்டதனால் அவருக்கு உண்டான வடுக்களுடன் அவரைக் காண்பார்கள் என்றும் வேதம் கூறுகின்றது. "இவ்வடுக்கள் எப்படி கிடைத்தன?” என்று அவர்கள் கேட்க, என் சிநேகிதரின் வீட்டில் காயம் பட்டதினால் உண்டானவைகள் என்று அவர் விடையளிப்பார். ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியே பிரிந்து, ஒரே பேரானவனை இழந்தவர்போன்று அனேக நாட்கள் புலம்பி அழுவார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். ஏக்காள பண்டிகையின்போது இவ்வாறு நிகழும் என்பது நினைவிருக்கட்டும். கொல்லப்பட்ட பலியை நிராகரித்ததன் விளைவாய் அவர்கள் புலம்பி துக்கிப்பார்கள். தற்பொழுது அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் உள்ளனர் அவர்கள் சிதறடிக்கப்பட்டு, குருடாக்கப்பட்டு இப்பொழுது ஒன்று சேர்ந்துள்ளனர். இவையனைத்தும் ஆறாம் முத்திரையின் கீழ் உள்ளன. அவர்களை ஒன்று சேர்க்க ஆறு எக்காளங்கள் முழங்கின. ஆறாம் முத்திரையின் கீழ் ஆறு எக்காளங்கள் முழங்கின என்று ஆறாம் முத்திரை திறக்கப்பட்டபோது நாம் பார்த்தோம். இவையனைத்தும் ஒரே நேரத்தில் சம்பவிக்கின்றன. யூதர்களுக்கு மாத்திரமே அவையாவும் ஒரே நேரத்தில் முழங்குகின்றன. ஆனால் நாமோ 2000 ஆண்டு காலமாக பெந்தேகோஸ்தே பண்டிகையில் இருந்து வருகின்றோம். 25 ஓசியாவின் காலம் தொடங்கி 2700 ஆண்டுகள் கழிந்தன. மூன்றாம் நாளில் அவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டு அவருடைய சமுகத்தில் ஜீவனைப் பெறுவார்கள் என்று அவர் வாக்களித்துள்ளார். அது நிறைவேறும் தருணத்தை உங்களால் காணமுடிகின்றதா? அந்த நேரம் இப்பொழுது பரிபூரணமாக சுவரில் எழுதப்பட்டுள்ளது. நாம் வாழும் காலம் என்னவென்பதை நாம் அறிந்திருக்கிறோம். யூதர்கள் இப்பொழுது தங்கள் சொந்த நாட்டில் இருந்துகொண்டு, எக்காளப் பண்டிகையை எதிர்நோக்கினவர்களாய், இயேசுவின் தியாகபலியை உணர்ந்து ஏற்றுக்கொள்ளவும், அவர் வருகைக்காக காத்திருக்கவும், அவரை முதலில் புறக்கணித்ததன் காரணமாக துயரப்படவும் ஆயத்தமாயுள்ளனர். எல்லாமே சரியான இடங்களில் பொருந்தியுள்ளன. சுவிசேஷத்தின் ஊழியன் என்னும் முறையில், இன்னும் மணவாட்டியின் எடுத்துக் கொள்ளப்படுதல் மாத்திரமே நிறைவேறாமல் உள்ளதென்றும். அது நிகழ்ந்தவுடன் என்ன நேர்ந்தது என்பதை இஸ்ரவேலர் உணர்ந்து கொள்வார்கள் என்பதையும் நானறிவேன். 26 அவர்கள் சிதறடிக்கப்பட்டு, குருடாக்கப்பட்டு, தற்பொழுது ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர். அப்படியானால் இன்னும் நிறைவேறவேண்டியது என்ன? அதுதான் மணவாட்டியின் எடுத்துக் கொள்ளப்படுதலாகும். அதன் பின்பு வெளிப்படுதல் 11ல் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலரை எக்காளபண்டிகைக்கென அழைத்து, அவர்கள் இழைத்த தவறை உணர்த்துவார்கள். அந்த முத்திரைகளினிடையே ஆறாம் முத்திரை தோன்றினது என்றும் லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்டனர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள், ஆறாம்,ஏழாம் எக்காள பண்டிகைக்கென அழைத்து, இழைத்த தவறை உணர்த்துவார்கள். அந்த முத்திரைகளினிடையே ஆறாம் முத்திரை தோன்றினது என்றும், லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்டனர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.ஆறாம், ஏழாம் எக்காளத்தின் இடையில் வெளிப்படுத்தல் 11 தோன்றி, ஆறாம் முத்திரையுடன் பிழையின்றி பொருந்துகின்றது. அது என்ன செய்யவேண்டும்? மோசே, எலியா என்னும் இரண்டு சாட்சிகளை அது தோன்றச் செய்யவேண்டும். அவர்கள் தீர்க்கதரிசிகள்.யூதர்கள் தங்கள் தீர்க்கதரிசிகளை மாத்திரமே நம்புவார்கள். இவர்கள் தீர்க்கதரிசிகளின் அடையாளங்களுடன் தோன்றுவார்கள். அவர்கள் ஏற்கனவே தீர்க்கதரிசியின் கிரியைகளை அவர்கள் கொண்டிருப்பார்கள். இதனால் என்ன புலனாகிறது? ஒருவன் மரித்துப் போனால், அல்லது வேறு எவ்விதத்திலாகிலும் இவ்வுலகை விட்டுச் சென்றால், அவன் தன்மை மாறுவதில்லை என்பது தெளிவாகின்றது. இவ்வுலகில் நீபொய்யனாக வாழ்ந்தால், அங்கும் பொய்யனாயிருப்பாய். நீ கர்வம் பிடித்தவனாக இவ்வுலகில் வாழ்ந்தால் அங்கும் கர்வம் பிடித்தவனாயிருப்பாய். இங்கு நீ சந்தேகிக்கிறவனாயிருந்தால், அங்கும் சந்தேகிக்கிறவனாயிருப்பாய். ஆண்களே,பெண்களே, உங்களை சீர்தூக்கி ஆராய்ந்து, உங்கள் நிலையை அறிந்துகொள்ள இதுவே ஏற்ற தருணம். ஏனெனில் மரணம் உன் தன்மையை மாற்றுவது கிடையாது.ஏறக்குறைய 2500 ஆண்டு முன்னர், மோசேயும், எலியாவும் இவ்வுலகை விட்டு சென்றனர்.ஆனால் வெளிப்படுத்தல் 11ல் அவர்கள் ஏற்கனவே பெற்றிருந்த தன்மைகளுடன் திரும்பவும் வந்து, முன்பு செய்த செயல்களையே மறுபடியும் புரிகின்றனர். மரணம் மனிதனின் உறைவிடத்தையே மாற்றுகின்றது. ஆனால் அவன் தன்மையை அல்லது அவன் கொண்டிருந்த விசுவாசத்தை அது மாற்றுவது கிடையாது. இன்று காலையில் நீங்கள் எத்தன்மையை உடையவராயிருக்கின்றீர்களோ அதே தன்மையை அங்கேயும் வகிப்பீர்கள், தேவனுடைய வார்த்தையை நீங்கள் சந்தேகிப்பவர்களாயிருந்தால், அங்கும் நீங்கள் சந்தேகிப்பவராயிருப்பீர்கள். எவ்வளவு தான் நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகக் காணப்பட்டாலும், நல்லவர்களாக வாழ்ந்தாலும் எனக்கு கவலையில்லை. மரணம் உங்களிலுள்ள ஏதோன்றையும் மாற்றுவதில்லை. உங்கள் உறைவிடத்தை மாத்திரமே அது மாற்றுகின்றது. தேவனுடைய வார்த்தையை, அது எழுதியுள்ளபடியே, நீங்கள் முழுமையுமாக ஏற்றுக்கொள்ளாவிடில், அங்கும் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அப்படிப்பட்ட கவலை உங்களுக்கு வேண்டாம். ஏனெனில் அத்தகையோர் அங்கு முதலாவதாக இருக்கவே முடியாது. தேவனுடைய வார்த்தையை நீங்கள் முழுமையாகஅது நிரூபிக்கப்பட்ட வல்லமையுடனும், அது வெளிப்படுத்தப்பட்டவிதமாயும் - ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது நீங்கள் வார்த்தையின் ஒரு பாகமாக ஆகிவிடுகின்றீர்கள். உயிர்த்தெழுதலின் காலையில் அவர் வார்த்தையை (இயேசுவை) எழுப்பினார். அதுபோன்று, அவர் வார்த்தையை மாத்திரமே எழுப்புவார். அவருடைய வார்த்தை புறப்பட்டுச் சென்றது. அவருடைய வார்த்தையை முழுமையாக ஏற்றுக்கொண்டு மரித்தவர் மாத்திரமே உயிரோடெழுவர். 27 கவனியுங்கள் யூதர்கள் சிதறடிக்கப்பட்டனர். அவர்கள் குருடாக்கப்பட்டனர் தற்பொழுது அவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக அவர்கள் ஜீவனைப் பெற வேண்டும்.புறஜாதியார் வெளியே அழைக்கப்பட்டு, மணவாட்டி ஆயத்தமாக்கப் பட்டிருக்கின்றாள். எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும் தருணம் அருகாமையிலுள்ளது. அதை உணருகிறோமா? நம்மால் அதை நம்ப முடிகின்றதா? ஒரு கட்டுக்கதையாக அதை பாவிக்கின்றோமா அல்லது அது தத்ரூபமாக நிகழவிருக்கும் சம்பவம் என்று நம்புகின்றோமா? அது நமக்குள் ஒரு பாகமாக அமைந்து, ஜீவனைக் காட்டிலும் மேலாக அமைந்துள்ளதா? இக்காலையில் கூடாரத்தில் அமர்ந்திருக்கும் உங்கள் மனப்பான்மை என்ன? ஒரு சிறு மந்தை மாத்திரமே அதை ஏற்றுக்கொள்ளும் என்பது நினைவிருக்கட்டும். யூதர்கள் இப்பொழுது தங்கள் நாட்டில் இருந்து கொண்டு, எக்காளப் பண்டிகைக்காகவும், மணவாட்டி எடுத்துக் கொள்ளப்பட்டு, வெளிப்படுத்தல் 11 நிறைவேறவும் காத்திருக்கின்றனர். சபையின் காலம் முடிவடைந்து விட்டது. முத்திரைகள் திறக்கப்பட்டு, சபை காலங்களில் விடப்பட்டவை திரும்பவும் அளிக்கப்பட்டு விட்டன என்பது ருசுவாகிவிட்டது. இஸ்ரவேல் நாடு இப்பொழுது காட்சி தந்து, எக்காளப்பண்டிகைக்காக ஆயத்தப்படுகின்றது.அல்லேலூயா! 28 இச்செய்தி செல்லும் ஏனைய நாடுகளிலுள்ளவர்களே, உறக்கத்தினின்று ஏழமாட்டீரோ? சகோதரனே, இச்செய்தி உன்னை குருடாக்குகின்றதா? இச்செய்தி உலகத்தினாலும், காலத்தினாலும், மக்களினாலும், வார்த்தையை எழுதிய பரிசுத்த ஆவியினாலும் உண்மையென நிரூபிக்கப்பட்டிருக்க, அது கள்ளத் தீர்க்கதரிசனம் என்று உதறித் தள்ளுவாயா? இது இயற்கையினாலும், ஆவியினாலும்,  உலகப் பிரகாரமான காரியங்களினாலும் உண்மையென்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரவேலர் ஆடுகளைப் போன்று தங்கள் தாய் நாட்டிற்கு ஒட்டிவிடப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்டனர். ஓநாய்கள் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்தி, பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிட்டனர். இஸ்ரவேலருக்கு வாக்களிக்கப்பட்ட ஆசிர்வாதம் அவர்கள் சொந்த நாட்டில் இருக்கும் போது மாத்திரமே நிறைவேறும். இஸ்ரவேலரை தேவன் அவர்கள் நாட்டின் புறம்பே ஒருக்காலும் ஆசிர்வதிப்பது கிடையாது. அந்நாட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொருவரும் நியாயந் தீர்க்கப்படுகின்றனர். அவன் சொந்த நாட்டில் மாத்திரமே தேவன் அவனை ஆசிர்வதிக்கமுடியும். இப்பொழுது அவள் அங்கு ஒரு நாடாகத்திகழ்ந்து, மணவாட்டியின் எடுத்துக் கொள்ளப்படுதலுக்காகக் காத்திருக்கின்றாள். அது நிகழ்ந்த பின்பே அவளுடைய தீர்க்கதரிசிகள் எக்காளப் பண்டிகையின் மூலம் இக்கடைசி காலத்தில் அவளுக்கு வெளிப்படுவார்கள். 29 சர்ப்பத்தின் வித்து தண்ணீர் ஞானஸ்நானம் போன்ற போதகங்களின் பேரில் தர்க்கம் செய்து குழப்பமுண்டாக்குபவரே, நீங்கள் குருடராயிருந்து அதை அறியாதிருக்கிறீர்கள். இப்பிரபஞ்சத்தின் தேவன் அவைகளைக் காணாதவாறு உங்களை குருடாகியிருப்பதை அறியாமலிருக்கிறீர்கள் (இன்று காலை நெருக்கங்களை எதிர்த்து போராடவேண்டிய சமயம் உண்டானதில் வியப்பொன்றுமில்லை). 30 ஓசியாவின் மூலம் கர்த்தர் பேசி, அவர்களை வெட்டினேன் என்று இஸ்ரவேலரைக் குறித்து சொன்னார். தீர்க்கதரிசிகளைக் கொண்டு அவர்களை வெட்டினேன் என்று அவர் கூறினார். அம்முறையைக் கையாடியே தேவன் தமது பிள்ளைகளை தமக்கென்று பெற்றுக்கொள்கிறார். மற்றைய நாடுகளிலிருந்து அவர்களை வெட்டியெடுக்கிறார். எதைக் கொண்டு? வார்த்தையாகிய அவருடைய இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைக் கொண்டு அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் நிரூபிக்கப்பட்ட அவருடைய வார்த்தையின் மூலம் தமது தீர்க்கதரிசிகளைக் கொண்டு நாடுகளின் மத்தியிலிருந்த ஒரு நாட்டை வெட்டி எடுக்கிறார். அது போன்று அவர் தமது வார்த்தையின் மூலம் ஸ்தாபனங்களிலிருந்து மணவாட்டியை வெட்டியெடுத்தார். கடைசி நாட்களில் இது நிகழுமென்று மல்கியா 4ம் அதிகாரத்தில் வாக்களிக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேல் நாடு தீர்க்கதரிசிகளைப் புறக்கணித்து, ஏனைய நாடுகளைப் போல் வாழ விருப்பம் கொண்டது. அதன் மூலம் இஸ்ரவேலர் கர்த்தரையே புறக்கணித்தனர். ஸ்தாபனங்களும் அதையே செய்தன.அவர்கள் "நாங்கள் வார்த்தையை விசுவாசிக்கிறோம். அதுசரிதான், ஆனால் அது இவ்விதம்தான் இருக்கவேண்டும்” என்கின்றனர். அவர்கள் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. தேவனுடைய வார்த்தை மாத்திரமே உண்மையானது. 31 சகோதரனே, இது என்ன சமயம்? போதகரே, இது என்ன நேரம்? நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்களின் நேரத்தையும், அடையாளத்தையும் உங்களால் காணமுடிகின்றதா? உங்களுக்குப் புரிகின்றதா? எழுப்புதல்கள் இப்பொழுது உண்டாகிறதில்லை என்று எல்லோரும் குறை கூறுகின்றனர். போதகர்களும் கூட அவ்வாறு கூக்குரலிடுகின்றனர். நமது சபைக்கு வரும் ஒரு சிறந்த பத்திரிக்கையை நான் படித்துக் கொண்டிருந்தேன். அதன் பதிப்பாசிரியரை நன்கு அறிவேன். அவர்கள் தெய்வ பக்தியுள்ளவர்கள். அவர்கள் "உபவாசித்து ஜெபியுங்கள்! உபவாசித்து ஜெபியுங்கள் ! எக்காளம் ஊதுங்கள் ! மகத்தான நாள் ஒன்று வரப்போகின்றது. எல்லோரும் ஜெபியுங்கள், ஜெபியுங்கள், ஜெபியுங்கள். இன்னும் காலதாமதமாகவில்லை” என்பதைத் தவிர வேறொன்றையும் பிரசுரிக்கமாட்டார்கள். ஏன் அவர்கள் அவ்விவிதம் செய்கின்றனர்? ஒரு பெரிய எழுப்புதல் உண்டாகவேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர். அவர்களிடையே எழுப்புதல் ஒன்று உண்டாகும் என்று விசுவாசித்து கூக்குரலிடுகின்றனர். அவர்கள் மிகவும் நல்லவர்கள். பின்னை ஏன் அவர்கள் அவ்விதம் செய்கின்றனர்? மணவாட்டியினிடையே உண்டாயிருக்கும் எழுப்புதலை அவர்கள் உணராமலிருப்பதே காரணம். அவர்கள் கிறிஸ்தவர்களாயிருப்பதால், இந்நேரத்தின் இழப்பை அவர்கள் உணருகின்றனர், ஆனால் இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை அவர்கள் அறியாமலிருக்கின்றனர். ஏதோ ஒன்று நேரிடவேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் ஏற்கனவே நிகழ்ந்துவிட்ட ஒன்றை இனி நிகழப்போகும் என்று எண்ணி, அதை எதிர்நோக்கியிருக்கின்றனர். 32 முன்புள்ள காலங்களிலும் இதுபோன்றே நடந்துள்ளன. மேசியா வரவேண்டுமென்று அவர்கள் எதிர்நோக்கியிருந்தனர். அவர் வந்தபோதோ அவரை அறிந்துகொள்ளத் தவறினர். மேசியாவின் வருகைக்கு முன்பு ஒரு முன்னோடி வரவேண்டுமென்று அவர்கள் நம்பியிருந்தனர். ஆனால் அவ்விருவரும் தோன்றினபோது, அவர்கள் முன்னோடியின் தலையை வெட்டி மேசியாவைக் கொன்று போட்டனர். அவர்கள் குருடாக்கப்படுவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது. எனவே அவர்கள் இவ்விதம் செய்தனர். ஓசியாவில் பேசின அதே ஆவியானவர், சீஷனாகிய யோவானிடமும் பேசி, கடைசி காலத்தில் சபை குருடாகவும், நிர்வாணமுமாய் இருந்து, கிறிஸ்துவை சபையினின்று புறம்பேதள்ளும் என்று அறிவித்தார். உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் கண்கூடாக நிறைவேறுவதை அவர்கள் காணத்தவறினர், ஆனால் ஏதோ ஒன்று நிகழவேண்டுமென்பதை மாத்திரம் அவர்கள் அறிந்திருந்தனர். அது என்னவென்பதை அவர்களுக்குத் தெரியாது. முன் காலத்து யூதர்களைப் போன்றே இக்காலத்தவரும் இருக்கின்றனர்-குருடராயும், ஐசுவரியம் உள்ளவர்களாயும், வேத பண்டிதராயும் மணவாட்டிக்கும் அவளுடைய செய்திக்கும் விரோதமாயும் இருக்கின்றனர். யூதர்கள் எந்த இயேசுவை எதிர்நோக்கியிருந்தனரோ, அவருக்கே விரோதமாக செயல்புரிந்தனர் என்பதை பாருங்கள். இன்றைய லவோதிக்கேயா சபையயும், முன்னாள் யூதரைப் போல் குருடராயும், நிர்வாணிகளாயும், நிர்ப்பாக்கியமுள்ளவராயும், பரிதபிக்கப்படத்தக்கவராயும் இருந்து, அதே சமயத்தில் அதை அறியாமலிருக்கின்றனர். ஐசுவரியமும், மகத்தான வேதத்தத்துவ போதகங்களும் நிறைந்துள்ள இக்காலத்தில், அவர்கள் செய்திக்கு விரோதமாயிருந்து, அதனுடன் எவ்வித தொடர்பும் கொள்ள மறுக்கின்றனர். 33 நோவாவின் காலத்திலிருந்த மக்கள் பேழைக்குள் பிரவேசிக்காததன் காரணம், செய்தியையும் அதை கொண்டு வந்த தூதனையும் அவர்கள் அறிந்து கொள்ளாமலிருந்ததே, அவர்கள் அழிந்து போனதற்கு அதுமாத்திரமே காரணம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த நேரம் என்னவென்பதை அவர்கள் அறியாமல் போனார்கள். கர்த்தர் வாக்களித்த விதமாகவே, அவர் பாவத்தை கண்டிக்கப் போகிறார் என்றும், இப்பூமியிலிருந்து மனிதனை அழிக்கப்போகிறார் என்றும் அவர்கள் உணராமலிருந்தனர். அவர் ஏதாவதொன்றை முன்னறிவித்திருந்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவார். அக்காலத்து மக்கள் நோவாவுக்கு அனுகூலமாயிருப்பதை விட்டு விட்டு, அவன் கொடியவன் என்று கருதினர். அவனை ஒரு தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்ளாமல், அவனைப் பரிகாசம் செய்தனர். அவனைப் பைத்தியக்காரன் என்று அழைத்தனர். அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம் என்னவென்பதை அவர்கள் அறியாமற் போயினர். மட்டுமின்றி, அக்காலத்து அடையாளத்தையும், செய்தியையும் அவர்கள் காணத்தவறினர். தூதனை அவர்கள் அறிந்துகொள்ளாமல், அவனைப் புறக்கணித்து, பரிகசித்தனர். இயேசு இவ்விதம் கூறியுள்ளார். "நோவாவின் நாட்களில் நடந்து போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்”. "நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள் வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண் கொண்டு கொடுத்தார்கள், ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது”. லூக்.17:26-27 34 நாம் எந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நாம் எங்கிருக்கிறோம்? இஸ்ரவேலர் தங்கள் சந்திப்பின் நாட்களை அறியாமலிருந்ததால், அதை இழந்து போயினர். இன்றைய மக்களும் கூட விஞ்ஞான ஆதாரங்கள், கல்வி முறைமைகள், வேத கல்லூரிகளின் போதனைகள் போன்றவைகளால் குருடாக்கப்படுகின்றனர். இவையனைத்தும் அவர்களைக் குருடாக்குகின்றன. 35 செய்தியின் எளிமையையும் அதைக் கொண்டு வரும் தூதனின் எளிமையையும் நினைவில் கொள்ளுங்கள். நோவா விஞ்ஞானத்தை சார்ந்தவனல்ல. அவன் படித்தவனல்ல. அவன் ஒரு எளிய, தாழ்மையுள்ள விவசாயி. ஒரு சாதாரண செய்தியை அவன் கொண்டவனாயிருந்தான். அக்காலத்து ஜனங்களின் கல்வியறிவுக்கு, அச்செய்தி மிகவும் சாதாரணமாய் தென்பட்டது. இன்றும் அவ்விதமேயுள்ளது. தம்மை நம்பியிருப்பவர்க்கு செய்தி எட்டவேண்டுமெனும் காரணத்தால், தேவன் காரியங்களை மிகவும் எளிமையாக்குகின்றார். இன்று வேறொரு செய்தியளிக்கப்பட்டாலும், நோவாவின் காலத்திலிருந்த அதே தேவன்தான் அதையளித்திருக்கிறார். கர்த்தர் இப்பொழுது பேசியிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, அதை விசுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அவருடைய தீர்க்கதரிசியாகிய நோவாவை அவர்கள் ஏளனம் செய்தனர் என்று இயேசு கூறியுள்ளார். அன்று அவர்கள் ஏளனம் செய்தது போன்று, அவர் வருகையின் நேரத்தின் போதும் அவர்கள் ஏளனம் செய்வார்கள். 36 பார்வோன் தான் வாழ்ந்த காலம் என்னவென்பதை உணராமல் இருந்த காரணத்தால் தான், அவனும் அவனது சேனைகளும் சமுத்திரத்தில் மூழ்கி மாண்டு போயினர். அவனுடைய காலத்தில் நேர்ந்த சாதனைகளில் அவன் அதிக கவனம் செலுத்தினான். அடிமைகளின் உழைப்பைக் கொண்டு அனேக பட்டினங்கள் கட்டுவதில் அவன் சிரத்தையனைத்தும் இருந்தபடியால் அவனுக்கு அளிக்கப்பட்ட தருணத்தை அவன் உணராமற்போனான். எனவே கர்த்தர் அனுப்பின் தீர்க்கதரிசி தூதனை அவன் வனாந்தரத்துக்கு விரட்டியடித்தான். அவன் மாத்திரம் அக்காலத்து ஜனங்களுக்கு அளிக்கப்பட்ட தேவனுடைய வாக்குத்தத்தத்தை உணர்ந்திருந்தால், எல்லாமே வேறுவிதமாக அவனுக்கு அமைந்திருக்கும். 37 இந்நேரத்திற்கென தேவனால் அளிக்கப்பட்ட வாக்குத்தத்தத்தை மாத்திரம் சபைகள் உணர்ந்தால், அவர்கள் அழிந்துபோக ஏதுவிராது. அமெரிக்கா மாத்திரம் அவள் தனக்கென்று ஏற்படுத்திக்கொண்ட இராஜ்ய பரிபாலனத்தின் சட்டதிட்டங்களை உணர்ந்திருந்தால், பள்ளிகளிலிருந்து வேதபுத்தகங்களையும், நாணயங்களிலிருந்து தேவனுடைய வார்த்தையையும், ஆணையினின்று "தேவன் பேரில்” என்னும் வார்த்தையையும், அகற்றியிருக்க மாட்டாள். அதை உணராமலிருப்பதன் காரணம் என்ன? அவள் குருடாயும் நிர்வாணமுமாய் இருப்பதால்தான். இந்த சிலாக்கியத்தை நாம் பெறுவதற்காக போர்க்களத்தில் உயிர்நீத்த கணக்கற்ற அருமையான வாலிபர் சிந்தின இரத்தத்தை அவள் மறந்து விட்டாள். அதை அவள் மறந்து நீண்ட காலமாகி விட்டது. அவர்கள் புழுதிக்குள் சென்று விட்டனர். ஆனால் ஒருவர் மாத்திரம், அவருடைய தீர்க்கதரிசி சிந்தின இரத்தத்தை நினைவு கூருவது போன்று, இவர்கள் சிந்திய இரத்தத்தையும் நினைவு கூறுகின்றார். நமக்கு இன்று சுவிசேஷத்தைக் கொணர்வதற்காக செலுத்தப்பட்ட கிரயத்தை அவர் நினைவு கூறுகின்றார்.சிங்கங்களின் கெபிகளில் போடப்பட்ட ஆயிரக்கணக்கான விசுவாசிகளை அவர் நினைவு கூறுகின்றார் வாளால் அறுப்புண்டு எரிக்கப்பட்டு, சிலுவையில் அறையுண்ட விசுவாசிகளை அவர் நினைவு கூறுகின்றார். தேவன் இவையனைத்தையும் நினைவில் கொண்டிருக்கின்றார். 38 சபையோ தீர்க்கதரிசிகளை மறந்துவிட்டது. இனிமேல் அவர்கள் தேவையில்லை என்று அவள் கூறுகின்றாள். அவர்கள் தேவையென்பதை தேவன் அறிவார். அவர் எப்பொழுதும் தமக்குச் சொந்தமானவர்களை, தமது வார்த்தையின் மூலம் உபயோகப்படுத்துகின்றார். ஆனால் இன்றோ அது தற்காலத்து நாகரீகத்துக்கு முரண்பாடாகக் கருதப்படுகின்றது. 39 மோசே தான் வாழும் காலத்தையும், அவனுடைய அழைப்பையும் அறிந்திருந்தான். ஏனெனில் வாக்குதத்தம் செய்யப்பட்ட தேவனுடைய வார்த்தை அடையாளங்களினால் உறுதிப்படுவதை அவன் கண்டான். அவன் யாரென்றும், வாக்களிக்கப்பட்ட வார்த்தையின் மூலம் அவன் என்ன செய்ய வேண்டும் என்றும் அவன் கண்டு கொண்டான். யார் என்ன கூறினாலும், அவன் பயப்படவேயில்லை. அவனுடைய செய்தியைக் குறித்து அவன் வெட்கம் கொள்ளவில்லை. அன்றிருந்த ஆசாரியர் ஒவ்வொருவரும், பார்வோனும் அவனைச் சார்ந்தோரும், ஆதிக்கத்திலிருந்த ஒவ்வொருவரும் அவன் செய்தியை ஒப்புக்கொள்ள மறுத்தாலும் அவனுக்குக் கவலையில்லை. முட்புதரில் அக்கினி ஸ்தம்பம் தொங்குவதையும், "நான் அனுப்புவதற்காக உன்னைத் தெரிந்து கொண்டேன் என்று அக்காலத்திற்கென வாக்களிக்கப்பட்ட வார்த்தையை அது மொழிந்தபோதும், அவன் உடனே கண்டு கொண்டான். அரசனின் பயமுறுத்தலுக்கு அவன் அஞ்சவில்லை. அவன் எகிப்துக்குச் சென்று, தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படியே, இஸ்ரவேலரை வெளியே அழைத்துச் சென்றான். தேவனுடைய வாக்குத்தத்தம் அடையாளங்களுடன் ஜனங்களை ஆயத்தப்படுத்தினான். அவன் தான் பெற்றிருந்த வேத பயிற்சியுடன் ஓடிப்போனான். ஆனால் தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டு, அடையாளங்களினால் உறுதிப்படுவதை அவன் கண்டு, இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்று கர்த்தர் அவனிடம் சொன்ன பின்பு , யார் என்ன கூறினாலும் அவன் கவலை கொள்ளவில்லை. பார்வோன் என்ன செய்வானோ என்று அவன் அஞ்சவேயில்லை. மற்றவரைக் குறித்தும் அவன் பயப்படவில்லை . தேவனுடைய வார்த்தையை உணர்ந்துகொண்ட பிறகு, அவன் தேவனுக்கு மாத்திரம் பயந்தான். அவனைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் ஒரு செய்தியுடன் எகிப்துக்குச் செல்ல முடியும் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அடையாளத்தால் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையை அறிந்துகொண்ட பின்பு, அவன் ராஜாவின் கட்டளைகளுக்கு பயப்படவேயில்லை. நாமும் அவ்வாறே இன்று உணர்ந்துகொண்டால். தேவனுடைய வார்த்தை உறுதிப்படுவதை மோசே கண்டதும், அதை அறிந்து கொண்டான். அந்த அடையாளம், மக்கள் புறப்படுவதற்கு தருணமாயிற்று என்பதை நிரூபித்தது. 40 யோபு, தரிசனம் காணும்வரை, அவனுக்கு நேர்ந்த சோதனை தேவனால் உண்டானது என்பதை அறிந்துகொள்ளவில்லை. உங்கள் வாழ்க்கையில் நேரிடும் சிறு சிறு சோதனைகள் தேவனால் அருளப்பட்ட தண்டனையென்று பிசாசு உங்களை நம்பச் செய்வானானால், நீங்கள் தோல்வியடைந்தவர்கள். யோபின் கேள்வி, மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? என்பதாம்.) மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்து போகிறான், மனுபுத்திரன் ஜீவித்த பின் அவன் எங்கே? தண்ணீர் ஏரியிலிருந்து வடித்து, வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறது போல, மனுஷன் படுத்துக் கிடக்கிறான், வானங்கள் ஒழிந்து போகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை. நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும் மனுஷன் செத்தபின் பிழைப்பானே? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். யோபு 14:10-14 41 ஒரு பூ செத்த பின்பு எங்ஙனம் வாழமுடியும் என்பதை அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஒரு இலை மரத்திலிருந்து உதிர்ந்து, நிலத்தினுள் புதைந்து, மறுபடியும் வசந்த காலத்தில் எவ்விதம் திரும்பிவரமுடியும் என்பதும் அவனால் அறியமுடியாத புதிராக இருந்தது. அவன், "மனிதன் படுத்துக் கிடக்கிறான். அவன் எங்கு செல்கிறான்? நான் தேவனை விசுவாசிக்கிறேன். ஆனால் மனிதனுக்கு என்ன நேரிடுகிறது?” என்று வினவினான். பின்னர் ஒரு நாள் மின்னல் மின்னியது. இடிகள் முழுங்கின. பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசியின் (யோபின்) மேல் இறங்கினர். அப்பொழுது வரப்போகிற அவரை அவன் கண்டான். அவர் பாவமுள்ள மனிதனின் மேல் கையைப் போடுவார், பரிசுத்த தேவன் அவர் (இயேசுவின்) மூலம் வழியை இணைப்பார். அவரைக் கண்டவுடன் யோபு கூக்குரலிட்டான். "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன், அந்நிய கண்கள் அல்ல, எண் கண்களே அவரைக் காணும், இந்த வாஞ்சையால் என் உள்ளந்திரியங்கள் எனக்குள் சோர்ந்து போகிறது.” யோபு 19: 25-27  உயிர்த்தெழுதல் என்னவென்பதை அவன் அறிந்து கொண்டான்.  42 கழுதை வேறு மொழியில் பேசும் வரை, பிலேயாம் தேவதூதனின் பிரசன்னத்தை அறியாமலிருந்தான். அவன் வழியில் தேவன் குறுக்கே நின்று, அவன் வரத்தை பணத்திற்கு விற்றுபோடாத படிக்கு தடைசெய்கிறார் என்பதை அறிந்து கொள்ளாத, ஒரு குருடாக்கப்பட்ட போதகனாய் அவன் இருந்தான். கழுதை மனிதனின் குரலில் பேசின மாத்திரத்தில், கர்த்தருடைய தூதன் வழியில் நின்று, தவறு செய்யாதபடி அவனைத் தடுப்பதை பிலேயாம் உணர்ந்து கொண்டான். ஓ, குருடாக்கப்பட்ட ஸ்தாபனங்களே, ஒரு போதகன் வழிதவறிச் சென்றுவிட்டான் என்பதை அறிவுறுத்த, ஒரு ஊமை கழுதையை தேவன் உபயோகித்து, அதற்குத்தெரியாத மொழியில் அதை பேசவைப்பாரானால், அதே செயலைப் புரிய ஒரு மனிதனை அவரால் உபயோகிக்க முடியாதா என்ன? 43 ஆகாப் அரசன் தன் நாளை அறிந்திருந்தல், தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருந்த மிகாயா தீர்க்கதரிசியை குற்றப்படுத்தியிருக்கமாட்டான். 1ராஜாக்கள் 22ம் அதிகாரத்தில் வரப்போகும் போரைக் குறித்து400 தீர்க்கதரிசகள், "சென்று வாருங்கள், நாங்கள் மகத்தானவர்கள். எங்களுக்கு மகத்தான ஊழியம் உண்டு. தேவனுடைய வார்த்தையிலும் வேத சாஸ்திரத்திலும் நாங்கள் பயிற்சி பெற்ற 400 ஆசாரியர்கள் அல்லது தீர்க்கதரிசிகள். எங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று கூறினபோது, ஆகாப் அரசனும் யோசபாத் அரசனும் அங்கிருந்தனர் அவைகளைக் குறித்து அந்த தீர்க்கதரிசிகளுக்கு ஒன்றும் தெரியாது என்பது ருசுவானது. எலியா என்பவன் தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசி. ஆனால் முந்தின தலைமுறை அவனை பைத்தியக்காரன் என அழைத்தது. ஆகாபின் இரத்தத்தை நாய்கள் நக்கும் என்று எலியா தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான். அந்த 400 ஆசாரியர்களும் மனிதனால் நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசிகள் அவர்கள் சரியாக தீர்க்கதரிசனம் உரைத்ததாக எண்ணியிருந்தனர். அவர்கள், " ஆகாப் குருவே, போங்கள், கர்த்தர் உங்களுடன் கூட இருக்கிறார். வேத வாக்கியங்கள் உங்கள் சார்பில் இருக்கின்றன. ஏனெனில் அந்நாடு இஸ்ரவேலருக்கே உரியது. போங்கள்” என்றனர். ஆனால் யோசபாத் அரசனே, ஆகாபைப் போல் பாவத்தில் உழன்றிருக்கவில்லை. போரில் வெற்றியுண்டாகும் என்று ஆகாபின் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்ததை அவன் கேட்ட பின்பும், "தீர்க்கதரிசனம் உரைக்க வேறு யாராகிலும் இங்கில்லையா?” என்று வினவினான். அதற்கு ஆகாப், " இன்னும் ஒருவன் இருக்கிறான், அவனை நான் பகைக்கின்றேன்” என்று விடையளித்தான். தேவன் என்ன செய்தார் என்பதைக் கவனித்தீர்களா? அவர் மறுபடியும் தீர்க்கதரிசியைக் கொண்டு தமது ஜனங்களை வெட்டுகிறார். ஆகாப், "அவன் எப்பொழுதும் என்னில் குற்றம் கண்டுபிடிப்பதைத் தவிர வேறொன்றையும் செய்யமாட்டான். நான் ஒரு பெரியவன் என்று உமக்குத் தெரியும். ஒரு விசுவாசியாக நான் இராவிடில், இந்த வேத கல்லூரியை நடத்தமாட்டேன். என்னிடம் பயிற்சி பெற்ற மனிதர் இருக்கின்றனர். அவர்களுக்கும் போதனை செய்ய நான் புத்தகங்ளையும் வேதாகமங்களையும் அனுப்பினேன். அவர்கள் மகத்தானவர்கள்” என்று யோசபாத்திடம் கூறினான். கந்தையணிந்த, எளிய, இம்லாவின் குமாரனான மிகாயா யாரென்பதை மாத்திரம் ஆகாப் அறிந்திருந்தால், அவனுக்கு மரணத்தை கொணர்ந்த அத்தவறை ஒருபோதும் செய்திருக்கமாட்டான். ஆனால் அவனோ மிகாயாவைக் கண்டனம் செய்தான். 44 ஓ ஜனங்களே, நீங்கள் வாழும் காலம் என்னவென்பதை உணர்ந்துகொள்ளுங்கள் ! என்ன நிகழ்ந்துள்ளது என்பதைக் கவனியுங்கள். இக்காலத்திற்கென வாக்களிக்கப்பட்டுள்ளது என்னவென்பதையும் கவனியுங்கள். ஸ்தாபனங்கள் மாத்திரம், அவர்கள் ஏன் கண்டனம் செய்யப்படுகின்றனர் என்றும், இஸ்ரவேலர் எகிப்தை விட்டு ஓடிசென்றவாறு, அவர்கள் அங்கத்தினர் அவர்களை விட்டு ஓடிப்போகும் காரணம் என்னவென்றும் அறிந்திருந்தால் நலமாயிருக்கும் . ஸ்தாபனங்கள் இக்காலத்து செய்தியை கண்டனம் செய்வதற்கு பதிலாக, அதற்கு செவிகொடுத்தால் நலமாயிருக்கும். இச்செய்தியை படிக்கும் போதகர்களே, நீங்கள் வாழும் நேரம் என்னவென்பதையும், காலத்தின் அடையாளத்தையும் அறிந்திருந்தால், மக்கள் ஏன் ஸ்தாபனங்களை விட்டு வெளியேறுகின்றனர் என்பது விளங்கும். பரிசுத்த ஆவியானவர் அவர்களை வெளியே. அழைக்கின்றார். "பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வர மாட்டான். பிதாவானவர் எனக்கு முன்பிருந்த காலங்களில் கொடுத்த யாவும் என்னிடத்தில் வரும்” என்று இயேசு கூறினார். 45 கையெழுத்து இன்று சுவரில் காணப்படுகின்றது. அவர்கள் அதைக் காண்கின்றனர், ஆனால் அதை உணர்ந்துகொள்ள முடியவில்லை. மல்கியா 3:1 இவ்வாறு உரைக்கின்றது. "இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான், அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார், இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்”  46 யூதர்கள் அதை எதிர்நோக்கியிருப்பதாக கூறிக்கொண்டனர். இன்றைய நாட்களுக்கு அது ஒப்பனையாயுள்ளது. இன்றுள்ள ஸ்தாபனங்களும் ஏதோ ஒன்று சம்பவிக்க இருப்பதை எதிர்நோக்கியுள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் எல்லோரும் ஜெபம் செய்து, உபவாசிக்கின்றனர். "நாம் ஜெபம் செய்து ஒன்று கூடுவோம். நம்மிடையே ஒரு மகத்தான எழுப்புதல் உண்டாகவேண்டும். மகத்தான சம்பவம் ஒன்று நிகழவிருக்கின்றது என்பதை நாமறிவோம் . எனவே சபை ஆயத்தப்பட வேண்டும்.” என்று அவர்கள் கூறுகின்றனர். யோவன்ஸ்நானன் தோற்றத்தின் போதும், அதற்காக ஜெபித்து வந்தனர். அவனே அவர்களுடைய சடங்குகளை நிராகரித்து, அவர்களுடைய பிதாக்கள் போதித்தவைகளுக்கு மாறாக போதித்தான். எனவே அவர்கள் அவனை புறக்கணித்தனர். அவனுக்கு கல்வியோ, ஆசாரியர்களின் உடையோ, அல்லது வேத சாஸ்திர அறிவோ கிடையாது. ஆனால் அவன் தேவனுடைய வாக்குத்தத்ததை நன்கு அறிந்தவனாய், மேசியாவின் வருகையை வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்தான். "அவர் உங்கள் மத்தியில் இருக்கிறார்" என்று அவன் அறிவித்ததைக் கேட்டவர் அவனை மூடனென்று கருதினர்... ஏனெனில் அவன் அவர்களுடைய வேதபள்ளியிலிருந்து வரவில்லை, கையெழுத்து சுவரில் காணப்பட்டது, ஆனால் அவர்களோ அதை அறியாமலிருந்தனர். எவருடைய வருகையை அவர்கள் எதிர் நோக்கியிருந்தனரோ. அவர் அவர்கள் மத்தியில் இருந்தார். அவர்களோ அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை வோதிக்கேயா காலத்திலுள்ள புறஜாதி ஸ்தாபனங்களும் அவர்களைப் போலவே குருடாயிருக்கின்றன.  ஏன்? அவர்கள் குருடராயிருப்பார்களென்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. எனவே அது உறுதியாக நிறைவேறவேண்டும். இஸ்ரவேலர் மாத்திரம் தங்களுக்கு அளிக்கப்பட்ட அடையாளத்தை உணர்ந்திருந்தால், மேசியாவின் வருகை அருகாமையிலுள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் . சீஷர்கள் இயேசுவிடம் "அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, தெப்படியென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன், அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள், இவ்விதமாய் மனுஷகுமாரனும் பாடுபடுவார் என்றார். அவர் யோவான் ஸ்நானனைக் குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுதே அறிந்துகொண்டார்கள்.   மத்.17:10-13  47 அவர்கள் என்ன செய்வார்கள் என்று வேதவசனங்கள் கூறியதையே அவர்கள் செய்தனர். அவர்கள் மாத்திரம் அவர்கள் செய்த மாய்மாலச் செயல்களைக் கண்டித்த "மூடவைராக்கியம்" கொண்ட மனிதனை அடையாளம் கண்டு கொண்டிருந்தால்! அவன் அவர்களை நோக்கி, "மாய்மாலக்காரரே, விரியன் பாம்புக் குட்டிகளே, வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன்யார்? ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள். தேவன் இந்த கற்களினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார். என்றான் எங்களுக்கு உலக ஆலோசனை சங்கம் உண்டு என்றும், சிறந்த உடையணிந்த அங்கத்தினர் உண்டு என்றும் நீங்கள் எண்ண வேண்டாம். தேவன் வீதிகளில் செல்லும் ஒன்று மற்றவர்கள், வேசிகள், குடிகாரர்கள், சூதாடுபவர்கள் போன்றவர்களிலிருந்து அவருக்குப் பிள்ளைகளை உண்டு பண்ணி, அவருடைய வார்த்தையை நிறைவேற்றுவார். அவர் இன்னும் 48 தேவனாயிருப்பதால் அவரால் இதை செய்யமுடியும். இஸ்ரவேல் குருடாக்கப்பட்டுள்ளது போன்று ஸ்தாபனங்களும் குருடாக்கப்பட்டுள்ளன. அவ்விதம் நிகழுமென்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. நான் கூறவிரும்பும் பாகத்தை அடையும்வரை, இவ்விருவரில் காணப்படும் ஒற்றுமையை எடுத்துரைக்க விரும்புகிறேன். லவோதிக்கேயா சபைக்கு ஒரு செய்தி அளிக்கப்பட வேண்டுமென்று மல்கியா 4 கூறுகின்றது. இப்பொழுது அவர்கள் எதை எதிர்நோக்கியிருக்கின்றனர்? அவர்கள் , எங்கள் ஸ்தாபனம் இதை அளிக்கும்: அச்செய்தி எங்கள் மூலம் வராமற் போனால், அது உண்மையல்ல, என்று கூறுகின்றனர். எதை செய்வார்கள் என்று எழுதப்பட்டுள்ளதோ, அதையே அவர்கள் செய்கின்றனர் என்று இயேசு கூறினார் . அது போன்றே மனுஷகுமாரனுக்கும் அவர்கள் செய்வார்கள். அவர்கள் அவரைப் புறக்கணிப்பார்கள். வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியால் அருளப்பட்டுள்ளன என்றும், அதில் ஒரு சிறுபாகமும் கூட நிறைவேறாமல் போகாது என்றும் இயேசு கூறியுள்ளார். வேதவாக்கியங்கள் நிறைவேறாமல் தடுக்க எவ்வித வழியுமில்லை. அவை எல்லாமே நிறைவேறவேண்டும் என்று இயேசு கூறினார். அவை நிறைவேறுவதை நாம் கண்கூடாக்க காண்கிறோம்.  49 எவை திரும்பவும் அளிக்கப்படும் (restored)? ஸ்தாபனங்களைச் சார்ந்துள்ள சகோதரரே, இதை கவனியுங்கள். ஆதி பெந்தே கோஸ்தே பண்டிகை திரும்பவும் அளிக்கப்படும். தொடக்கத்தில் அது எவ்வாறு இருந்ததோ, அவ்வாறே, இஸ்ரவேலருக்கு எக்காளப் பண்டிகை முழுங்கு முன்னர், அது திரும்ப அளிக்கப்படும். அதை திரும்ப அளிக்க ஏதோ ஒன்று அவசியமாயுள்ளது. பிதாக்களுடைய விசுவாசம் பிள்ளைகளுக்குத்திரும்ப அளிக்கப்படும் என்று மல்கியா 4 உரைக்கின்றது. இஸ்ரவேலர் மாத்திரம் வாக்களிக்கப்பட்ட மேசியாவின் அடையாளத்தைக் கண்டு கொண்டிருந்தால், அவர்கள் இன்றுள்ள நிலையில் இருக்கமாட்டார்கள். அவர்கள் ஏன் அதை கண்டுகொள்ளவில்லை? ஏனெனில் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று தேவன் கூறினார். உங்களில் எத்தனை பேர் அதை விசுவாசிக்கின்றீர்கள்? அதே தேவன் தான், லவோதிக்கேயா சபை செய்தியை விசுவாசிக்காது என்று கூறியுள்ளார். நமக்கு முன்பாக அது நிறைவேறுகின்றது. அதை புறக்கணிப்பதைத் தவிர வேறெதை அவர்களால் செய்ய முடியும்? வாக்களிக்கப்பட்ட மேசியாவின் அடையாளத்தை - மனுஷ குமாரனின் அடையாளத்தை- அவர்கள் மாத்திரம் கண்டு கொண்டிருந்தால்! பெந்தேகோஸ்தே காலம் முழுவதிலும் அவர் மனுஷகுமாரன் என்னும் பெயர் கொண்டிருந்தர். பின்னர் தேவ குமாரன் என்னும் பெயர் பெற்றார் ஆயிரம் வருட அரசாட்சியில் அவர் தாவீதின் குமாரன் என்னப்படுவார். மூன்று குமாரர், ஆனால் ஒரே தேவன். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி வெவ்வேறு அலுவல்களைக் கொண்டவராயினார். எனவே, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, ஆனால் அதே தேவன். மனுஷகுமாரன், தேவகுமாரன், தாவீதின் குமாரன் , ஒரே தேவன் மூன்று வெவ்வேறு அலுவல்களைக் கொண்டவராயிருக்கிறார். எனவே பிதா, குமாரன் , பரிசுத்த ஆவி மூன்று தெய்வங்களைக் குறிப்பிடுவன அல்ல. ஒரே தேவன் மூன்று யுகங்களில், வெவ்வேறாக தம்மை வெளிப்படுத்துபவராக இருக்கிறார்.  50 இன்றைய சபைகள் பாரம்பரியத்தினால் குருடாக்கப்பட்டுள்ளன. அவர்களால் காண முடியவில்லை. ஏன் அவர்களால் காண முடியவில்லை என்று வியப்புறுகின்றீர்களா? அவர்களால் ஒரு போதும் காண முடியாது. இது "கர்த்தர் உரைக்கிறதாவது” பின்னை ஏன் நீங்கள் பிரசங்கம் செய்கின்றீர்? என்று நீங்கள் ஒருக்கால் கேட்கலாம். யோவானும் மற்றோரும் எக்காரணம் கொண்டு பிரசங்கித்தனரோ, அதே காரணத்தினால்தான் நானும் பிரசங்கிக்கிறேன் ஓ தேவனுடைய ஆடுகளே,  51 தேவனுடைய சத்தத்துக்குச் செவி கொடுங்கள். என் ஆடுகள் என் சத்தத்துக்குச் செவி கொடுக்கும்" என்று இயேசு கூறியுள்ளார். கிணற்றடியில் இருந்த சமாரிய ஸ்திரீ, மேசியாவின் அடையாளத்தின் மூலம் அவள் வாழும் நாளைக் கண்டு கொண்டாள். அவள் ஒரு மோசமான நிலையில் இருந்தாள்.ஸ்தாபிக்கப்பட்ட அந்த பழைய ஸ்தாபனங்களுடனும், அவர்கள் கடைபிடித்த முறைமைகளுடனும் எவ்வித தொடர்பும் கொள்ள அவள் விரும்பவில்லை. அவர்கள் தங்கள் விருப்பப்படி பல்வேறு வகைகளில் வாழ்ந்து வந்தனர் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவர்கள் கடைபிடித்த முறைமைகளில் அவளுக்கு நம்பிக்கையில்லை. என்றாவது ஒருநாள் அவர் (மேசியா) தோன்றுவார் என்பது மாத்திரம் அவளுக்கு நன்றாகத் தெரியும். இந்த எளிய பெண், அவள் எதிர்நோக்கியிருந்த அவரை, கிணற்றடிக்கச் செல்லும் வழியில் கண்டாள். அவள் இருதயத்தில் மறைந்திருந்த இரகசியங்களையும். அவள் பாவத்தையும் அவர் வெளிப்படுத்தினார். 400 ஆண்டு காலமாக அவர்களுக்கு தீர்க்கதரிசி இல்லாமல் இருந்தது. ஆயினும் அவள் அவரிடம், "நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும்போது இவைகளையெல்லாம் செய்வார்” என்றாள். இயேசு அவளை நோக்கி, "நானே அவர்” என்றார். அவள் அவரை அடையாளம் கண்டு கொண்டாள். அவள் மனதில் வேறெந்த கேள்வியும் எழவில்லை இதை எங்ஙனம் நிருபிக்கமுடியும்? அது ஏற்கனவே நிருபிக்கப்பட்டுவிட்டது. மேசியா வந்தால் இவைகளையெல்லாம் செய்வார் என்று அவள் நம்பியிருந்தாள். வேத வாக்கியங்கள் மூலம் அவள் அவரைக் கண்டு கொள்ள முடிந்தது என்றால், சாயங்கால வெளிச்சத்தையும் இன்றைய அடையாளத்தையும் நாம் ஏன் கண்டு கொள்ள முடியாது? "மேசியா வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்”. இயேசு அவளிடம், "உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். அதன் பின்பு, அவளுக்குக் கேட்க எவ்வித கேள்வியும் இல்லை. அவள் புறப்பட்டு ஜனங்களிடம் சென்று. "நீங்கள் வந்து மேசியாவைப் பாருங்கள்” என்றாள் அவள் வாழும் காலத்தை அவள் அறிந்துகொண்டாள். 52 அத்துடன் அது முடிவு பெற்றது. நாத்தான்வேல் என்னும் மகத்தான எபிரேயனும் அதை கண்டு கொண்டான். வாக்களிக்கப்பட்ட மேசியாவின் அடையாளத்தை அவன் கண்டவுடன் விசுவாசித்தான். ஜனங்கள் சபையை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினது. அக்காலத்து ஆசாரியர்கள் அமைதியைக் குலைத்தது. அவர்கள் "அவன் நடத்தும் கூட்டங்களுக்கு சென்றால், உடனே சபையை விட்டு புறம்பாக்கப்படுவீர்கள்" என்று பிரகடனம் செய்தனர். இன்றும் அதுவே சம்பவிக்கின்றது. அந்த குருடன் உங்களுக்கு நினைவிருக்கின்றதா? யூதர்கள் கேட்ட கேள்விக்கு அவன் பெற்றோர் மாறுத்தரம் ஒன்றும் கூறவில்லை, அவர்கள் பயந்தார்கள். இயேசுவை சந்திப்போர் அல்லது அவருடைய கூட்டங்களுக்குச் செல்வோர் உடனே சபையின்று புறம்பாக்கப்படுவர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அந்த குருடனே , அவனுக்காக அவனே பேசும் திறனைப் பெற்றிருந்தான் . ஒருசமயம் குருடனாயிருந்த அவன் , இப்போது பார்வையடைந்து விட்டான் . நானும் முன்பு குருடனாயிருந்தேன், ஆனால் இப்பொழுது காண்கிறேன். பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தி தந்தவைகளை 53 நான் முன்பு அறிந்திருக்கவில்லை. ஸ்தாபனங்களே, நீங்கள் கட்டுக்கு மீறி சென்று கொண்டிருங்கள். எங்களைப் பொருத்தவரை நாங்கள் முன்னேறிக்கொண்டிருக்கின்றோம். "நான் உயர்த்தப்பட்ட பின், உங்களெல்லோரையும் என் பக்கமாக இழுத்துக் கொள்வேன்”. நாத்தான்வேல் கண்டு கொண்டு விசுவாசித்தான்.  54 மோசே அவன் வாழ்ந்த நாளுக்குரிய ஆசிர்வாதத்தைப் பெற்றிருந்தான் என்பதை அறிந்திருந்தான். அது விசித்திரமாகத் தென்பட்ட போதிலும் வேத ரீதியாய் அமைந்திருந்தது. "எகிப்துக்கு கொண்டு செல்லும்படி எனக்குக் கட்டளையிட்ட ஒளியை நான் வனாந்தரத்தில் கண்டேன் என்று நான் எப்படி அவர்களிடம் சொல்லமுடியும்" என்று மோசே கேட்டான் ஆயினும், "நான் உன்னுடனே கூட இருக்கிறேன் ” என்னும் வாக்கை அவன் தேவனிடத்தில் பெற்றிருந்தான். தேவன் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் அவரை எகிப்தில் வெளிப்படுத்தினது மாத்திரமல்ல. தெரிந்துகொள்ளப்பட்டு வெளியே அழைக்கப்பட்டவர்களை அவர் ஒன்று சேர்த்து, அவர்களுக்கு தரிசனமாகி, இவ்விதமாய் மோசேயின் ஊழியத்தை நிரூபித்தார். தீர்க்கதரிசியாகிய மோசே அவர்கள் எகிப்து தேசத்தினின்று வெட்டியெடுத்து, ஒரு ஸ்தலத்தில் கொண்டு வந்தபோது, நாம் இன்று காணும் அக்கினி ஸ்தம்பம் அன்று சீனாய் மலையின் மேல் காணப்பட்டது. அதை அந்த நாளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கர்த்தருக்குத் துதியுண்டாவதாக! அது என் உயிரைக் காட்டிலும் மேலானது.  55 எனக்கு வயதாகுந்தோறும், கெட்ட நடத்தை, நெறி தவறல் போன்றவை நாட்டில் பெருகி வருவதை நான் காண்கின்றேன். நான் சுற்றும் முற்றும் பார்த்து, நிகழ்ந்து வருபவைகளை என்னால் கண்டுகொள்ள முடிகிறது. ஒருவிதத்தில் என் மனம் மகிழ்ச்சியால் துள்ளுகின்றது. ஏனெனில் இன்னும் சிறிது காலத்தில், இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்துபோகும். அப்பொழுது வேறொன்று பரலோகத்தில் எனக்காக் காத்துக்கொண்டிருக்கும் என்று நானறிவேன். நான் ஜனங்களை வெட்டியெடுத்து, வெளியே கொணர்ந்து, தேவன் அக்கினி ஸ்தம்பத்தில் இங்கு நின்று கொண்டிருக்கிறார் என்பதை வேத வாக்கியங்களின் மூலம் அவர்களுக்குக் காண்பிக்க முயல்கிறேன். ஆயிரக்கணக்கானவர் அந்த அக்கினிஸ்தம்பத்தைக் கண்டனர். அவருடைய புகைப் படமும் எடுக்கப்பட்டு விட்டது. அதே சமயத்தில் போலியாட்களும் எழும்புகின்றனர். அவ்விதம் அது நிகழ வேண்டியதாயுள்ளது. மோசேயின் காலத்திலும் அப்படிப்பட்டவர் எழும்பி, அவன் செய்த அற்புதங்களையே செய்தனர். கர்த்தர் மோசேயிடம், "அவர்களை விட்டு பிரிந்து போ. நான் அவர்களை விழுங்கப்போகின்றேன்" என்றார் உலகம் இன்று பணத்திட்டங்களையும் மற்றைய திட்டங்களையும் வகுக்கும் போலியாட்களால் நிறைந்துள்ளது. இஸ்ரவேலரை விடுவிக்க எகிப்துக்குச் சென்ற மோசே தேவனுடைய மகத்தான தீர்க்கதரிசியாக விளங்கினான். இஸ்ரவேலரும் அளிக்கப்பட்ட அடையாளத்தைக் கண்டு கொண்டனர். வேதவாக்கியங்கள் வாக்களித்திருந்த ஒருவனாய் அவன் திகழ்ந்து, தேவனால் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிப்படுத்தப்பட்டான். இயேசுவும் வேதவாக்கியங்கள் வாக்களித்திருந்த ஒருவராய் திகழ்ந்தார். அந்த உண்மை சமாரியா ஸ்தீரீக்கு வெளியானது. இயேசு வேதவாக்கியங்களின் விவரணமாய் இருந்தார். அவருடைய வாழ்க்கை வேதவாக்கியங்களின் அர்த்தத்தை விவரித்தது. இந்நேரத்திற்கேற்ற செய்தியை உங்களால் காணமுடியவில்லையா? நாம் எங்கிருக்கிறோம் என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடிகின்றதா? நாம் வாழும் இக்காலம் எது வென்பதை வேதவாக்கியங்களின் மூலம் செய்தி விவரிக்கின்றது. ஒரு நாள் இயேசு எருசலேமை நோக்கியவாறு இவ்விதம் கூறினார்" எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே ! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளை கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன், உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. மத். 23:37  56 இதனை நான் ஒரு ஒப்பிடலாகக் கூறவில்லை. அன்று காலை 10 மணியளவில் அந்த வேசியின் சபையை நான் தரிசனம் கண்ட போது, பரிசுத்த ஆவியானவர் கண்ணீர் வடிப்பதை என் இருதயத்தில் உணர்ந்தேன்..... "எருசலமே, எருசலமே,.... எத்தனைதரம்" நான் உன்னைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன். ஆனால் நீ என்ன செய்தாய் ? உன்னிடம் நான் அனுப்பின் தீர்க்கதரிசிகளைக்கொன்று போட்டாய். இன்று சபைக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தி ஸ்தாபன கோட்பாடுகளினால் கொலை செய்யப்படும் விதமாய், அவர்களை "நீ வாழும் உன் காலத்தை மாத்திரம் அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும். ஆனால் இப்பொழுதோ காலதாமதமாகி விட்டது " என்றார். இன்றைய சபைகளும் அதே நிலையில்தான் உள்ளன. அவள் இனி மீட்கப்படமுடியாது என்பதை மனப்பூர்வமாக நம்புகிறேன். அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ, அது உங்கள் சொந்தக் கருத்து. ஆனால் இப்பொழுது நான் கூறியது என் கருத்தாகும். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது கிடையாது. என்னைப் பொறுத்தவரையில், கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாகவே அவள் மீட்கப்படமுடியாத நிலையை அடைந்துவிட்டாள். சிக்காகோ பட்டினத்திற்கு இப்பொழுது நேர்ந்துள்ளது என்னவென்பது, அவளையறிந்தவர்க்குத் தெரியும். அது தொடர்ந்து நீடிக்கும். என் பெயர் அவள் பெயருக்கு முன்னால் இருப்பதை கவனிக்கவும். இது "கர்த்தர் உரைக்கிறதாவது." அவள் படிப்படியாக விழுந்து போவதைக்காண்பீர்கள்.  57 1933 ஆண்டு நான் கண்ட தரிசனத்தை நினைவுகூருங்கள், இக்கடைசி காலத்தில் பெண்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்று நான் முன்னறிவித்தது நினைவிருக்கிறதா? முசோலினி ஹிட்லர் என்பவர் மர்மமான முடிவையடைவார்கள் என்றும், உலகின் மூன்று பெரிய தத்துவங்கள் கம்யூனிஸத்துடன் ஒருங்கிணையும் என்றும், வாகனங்கள் முட்டை வடிவில் அமைந்திருக்கும் என்றும், பெண்கள் ஆண்களின் உடைகளை அணிவார்கள்அவர்களுடைய உள்ளாடை போன்ற உடைகளையும் கூட உடுத்த அத்தியிலை போன்ற உடைகளை அணிவார்கள் - என்றும், ஒழுக்கங் கெட்டவர்களாய் எவ்விதம் நடந்து கொள்வார்கள் என்றும் அத்தரிசனம் காண்பித்தது. இப்பொழுது அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அது உங்கள் கண்களுக்கு முன்பாக நிற்கிறது.  58 கிறிஸ்தவ பெண்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர், அவர்கள் மேல் தங்கியிருக்கும் ஒழுக்கங்கெட்ட ஆவி பிசாசினால் உண்டானது என்பதை அறிந்திருந்தால் நலமாயிருக்கும். அந்த ஒழுக்கங்கெட்ட ஆவிதான் அவர்களை மயிர் கத்தரிக்கத் தூண்டுகின்றது. பிசாசு மாத்திரமே அவர்களை அவ்விதம் செய்யத்தூண்டுவான். அப்படி செய்வது வேதத்திற்கு முரணான செயலாகும். ஏதோன் தோட்டத்தில் இருந்தது போலவே இப்பொழுதும் உள்ளது. பெண்களோ, "அந்த உருளும் பரிசுத்த போதகர்..." என்று எள்ளி நகைத்து, அதை உதறித் தள்ளுகின்றனர். ஆனால் நான் அவ்விதம் கூறவில்லை. நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நான் சுயமாக ஒன்றும் கூறவில்லை. வேதத்தில் கூறியுள்ளதை மாத்திரமே நான் எடுத்துரைக்கின்றேன். அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்றனர். இயேசு ஒருமுறை, "என்னை ஆண்டவர் என்று அழைக்கின்றீர்கள். நான் செய்யவேண்டுமென்று கூறும் செயல்களை நீங்கள் செய்வதில்லை" என்று கூறினார். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கவே முடியாது. நான் அவர்கள் மேல் தீர்ப்புரைக்கும் நீதிபதியல்ல. ஆனால் தேவனுடைய வார்த்தை கூறுவதையே நான் எடுத்துரைக்கின்றேன். இந்த வார்த்தை அனைத்தும் இயேசு கிறிஸ்துவினுடைய வெளிப்பாடாகும். அவர்கள் மேல் தங்கியுள்ள நெறி தவறிய ஆவி பிசாசு என்பதை மாத்திரமே பெண்கள் அறிந்துகொண்டால் நலமாயிருக்கும். இதுவரை என் வாழ்க்கையில் நான் கண்டுள்ள மிக நெறி தவறிய ஸ்தலம் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில் பட்டினமாகும். நான் ஹாலிவுட்டுக்கு சென்றிருக்கிறேன். உலகம் பூராவும் நான் சுற்றி வந்திருக்கிறேன். எல்லாவித ஆபாச செயல்களையும் நான் கண்டிருக்கிறேன். பாரிஸ் நாட்டிலும் இங்கிலாந்திலும் அவைகளைக் கண்டிருக்கிறேன். இங்கிலாந்து மிகவும் சீர்கெட்ட நிலையை அடைந்துள்ளது. ஒருநாள் இங்கிலாந்து தண்ணீரில் மூழ்கிவிடும் என்று நான் நினைக்கின்றேன். அது அவளுக்குத் தகுதியுள்ளதாகும்.அசுத்தம், குப்பை, அழகு... இங்கிலாந்து உலகின் நெறி தவறிய சாக்கடை தேக்கமாக (cesspool) திகழ்கின்றது. என் வாழ்க்கையில் நான் இதுவரை கண்டவர்களில், வேதத்தை அதிகமாக மறுதலிப்பவர்கள் இங்கிலாந்து நாடாகும். அவள் சத்தியத்தைப் புறக்கணித்ததன் விளைவாக அவ்விதம் இருக்கிறாள். அங்குள்ள பூங்காக்களில் ஆண்களும், பெண்களும், சிறு பையன்களும், சிறு பெண்களும் வெளிப்படையாக ஆபாச செயல்களில் ஈடுபடுகின்றனர். அவள் ஒரு சாக்கடை நீர்த்தேக்கமாக ஆகிவிட்டாள். பிரான்சும், உலகிலுள்ள மற்ற நாடுகளும் அதே நிலையில் உள்ளன- ஐக்கிய நாடுகளும் கூட இப்பொழுது அமெரிக்கா அவர்கள் அனைவருக்கும் தலைமையாக விளங்குகின்றாள். அவளைக் கவனியுங்கள். அமெரிக்க பெண்கள் அவர்கள் தலைமயிரைக் கத்தரித்து, அரைக்கால் சட்டைகளையும், ஆண்கள் உடுக்கும் மேல் சட்டைகளையும் ( slacks) அணிந்து கொண்டு, புகை பிடித்து, அதே சமயத்தில் தங்களை விசுவாசிகள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர். சகோதிரியே, நீ அதை உணருவதில்லையா?... மன்னிக்கவும். என் சகோதரி அத்தகைய செயல்களைப் புரியமாட்டாள். அது பிசாசினால் உண்டானது என்பதை நீங்கள் உணரவேண்டும்.  59 தேவனுடைய வார்த்தை இன்று அற்புதங்களாலும், அடையாளங்களாலும் உங்களிடம் உறுதிப்படுத்தப்பட்டு, நிரூபிக்கப்பட்டாலும், பண்டைய காலத்து யூதர்களைப் போலவே நீங்களும் விசுவாசிக்க மறுக்கின்றீர்கள். நீங்கள் செய்வ தெல்லாம் சரி என்று ஆமோதிக்கும் ஸ்தாபனங்களின் பாரம்பரியங்களை நீங்கள் இறுகப் பற்றிக் கொள்கின்றீர்கள். நீங்கள் அன்னிய பாஷை பேசி, மேலும் கீழும் குதித்து, ஆவியில் பாடுகின்றீர்கள். எனினும், உங்கள் பெண்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்கின்றனர். ஒரு கிறிஸ்தவப் பெண் அங்ஙனம் செய்யலாமா? பிசாசுகள்-மந்திரவாதிகள்அன்னிய பாஷை பேசி அதன் அர்த்தத்தை விவரிப்பதை நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் மேலும் கீழும் குதித்து, ஆவியில் நடனமாடி, அதே சமயத்தில் மண்டை ஓட்டிலுள்ள இரத்தத்தைக் குடித்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தை சபிப்பதையும் நான் கண்டிருக்கிறேன்.  60 "நான் இன்னின்ன சபையைச் சார்ந்தவன். அல்லேலூயா! கர்த்தருக்கு மகிமை” என்று நீங்கள் கூறலாம். நீங்கள் எதை சார்ந்தவர்கள்? சபை என்பது தேவனுடைய வார்த்தையாகும். இத்தகைய செயல்கள் புரிவது அவமானம் என்று தேவனுடைய வார்த்தை உரைக்கின்றது.  61 போதகர்களே! அந்த ஏழை பிள்ளைகளை நரகத்துக்கு வழி நடத்தும் குருடரான பரிசேயரே! தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தால், எங்கே உங்கள் ஸ்தாபனங்கலிருந்து புறம்பாக்கப்பட்டு, ஆகாரச் சீட்டை இழந்து போவீர்களோ என்னும் பயம் கொண்டவர்கள் நீங்கள். மாய்மாலக்காரனே உனக்கு வெட்கமில்லையா? தேவன் வாக்குத்தத்தம் செய்த நேரம் நெருங்கி வருவதைக் காண்கின்றாய். ஆயினும் தேவனுடைய வார்த்தையினின்று அகன்று சென்று, உன் பாரம்பரியங்களுக்குத் திரும்ப சென்றுவிடுகின்றாய். குருடாக்கப்பட்டவனே இதை செய்வதற்கு உனக்கு எவ்வளவு துணிச்சல் நீ குருடாக்கப்பட்டுள்ளாய் என வேதம் கூறவில்லையா? உன்னால் இதை புரிந்துகொள்ள முடியவில்லையா? நீ நிர்வாணியும் நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப் படத்தக்கவனும், குருடனாயும் இருந்தும் அதை அறியாமலிருக்கின்றாய் என்று வேதம் உரைக்கின்றது. இயேசு வாசற்படியில் நின்று கொண்டு, உன் கண்கள் திறக்கப்பட, உனக்கு கலிக்கம் கொடுக்க முயல்கின்றார் . நீயோ அதை வாங்கிக்கொள்ள மறுக்கின்றாய். அப்படி செய்வதனால், நீ வேத வாக்கியங்களை நிறை வேற்றுகின்றாய்.  62 தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் முரட்டாட்டம் பிடிக்கும் பெண்களே, மார்க்கம் என்னும் பெயரில் கிரியை செய்யும் நெறிதவறிய ஆவியே இவைகளை நீங்கள் செய்யத்தூண்டுகின்றது. ஒவ்வொரு காலத்திலும் பிசாசு அவ்விதமே கிரியை செய்துகொண்டு வருகின்றான். ஒவ்வொரு தீர்க்கதரிசியினிடத்திலும், பரிசுத்தவானிடத்திலும் அவன் பக்தியுள்ளவனைப் போல் வருகின்றான். ஏன், இயேசுவினிடத்திலும் கூட அவன் அவ்வாறே வந்தான். பெந்தேகோஸ்தே சபையினின்று தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் கூடுமானால் வஞ்சிக்கும் அளவுக்கு, அது கடைசி நாட்களில் அவ்வளவு தத்ரூபமாக அமைந்திருக்கும் என்று வேதம் உரைக்கின்றது. தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பவர் ஒரு சிலர் மாத்திரமே. இயேசு இவ்விதம் கூறியுள்ளார். "ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதை கண்டு பிடிக்கிறவர்கள் சிலர். மத்.7:14 "நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.” லூக். 17 : 26 "...நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே... அந்தப் பேழையிலே எட்டு பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.” 1பேது. 3 : 20 63 சற்று சிந்தனை செய்து பாருங்கள். நீங்கள் வாழும் காலத்தையும் நேரத்தையும் அடையாளம் கண்டுகொள்ள முடிகின்றதா? உங்கள் பெண்கள் ஏன் தலைமயிரைக் கத்தரிக்கின்றார்கள்? "ஓ, எங்கள் சபை அதை குறித்து ஒன்றும் கூறுவது கிடையாது” என்று நீங்கள் சொல்லலாம். ஏன் தெரியுமா? நீங்கள் குருடராயிருக்கின்றீர்கள். "தலைமயிர் கத்தரிப்பதால் தவறு ஒன்றுமில்லை” எனக் கூறலாம். ஆனால் அது தவறென்று வேதம் உரைக்கின்றது. தலைமயிர் கத்தரித்துள்ள நிலையில் நீங்கள் ஜெபம் செய்வதால், நீங்கள் கண்ணியமற்றவர்கள். "ஒரு ஸ்திரீ தலையை மூடிக்கொள்ள வேண்டும் ” என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால் வேதமோ தலைமயிர்தான் அவளுக்கு முக்காடாக அளிக்கப்பட்டுள்ளது என்று உரைக்கின்றது - தொப்பியல்ல. மோசே, "ஆண்டவரே, பாதரட்சைகளுக்குப் பதிலாக என் தொப்பியைக் கழற்றிவிடுகிறேன்" என்று கூறியிருந்தால் எவ்வாறிருக்கும்? அது சரியல்ல. கர்த்தர் “பாதரட்சை” என்றால் அது "பாதரட்சை" என்றுதான் அர்த்தம். அவர் "தலைமயிர்" என்றால் அதை தான் குறிக்கின்றதேயன்றி தொப்பியையல்ல. கர்த்தருக்கு துதியுண்டாவதாக! அவர் எதை கூறுகின்றாரோ, அதையேதான் குறிப்பிடுகின்றார். வேதத்தை நாம் சொந்தவிதமாய் வியாக்கியானம் செய்யவேண்டிய அவசியமில்லை. அது எதை கூறுகின்றதோ, அதையே குறிப்பிடுகின்றது. தேவனே அதன் வியாக்கியானி. உங்கள் ஸ்தாபனங்கள் அர்த்தம் கொள்ளும் விதத்தில். அது அமைந்திருக்கவில்லை. 64 கென்டகியிலுள்ள லூயிவில் பட்டினத்தின் ஐந்தாம் வீதியிலுள்ள மதுக்கடை ஒன்றில், "மாது சிரோண்மணிகள் (ladies) அமரும் மேசைகள்” என்று எழுதப்பட்ட ஒரு பலகை தொங்கவிடப்பட்டிருந்தது. நான் அங்கு நின்று கொண்டு, "கெளரவமுள்ள பெண்மணிகள் (ladies) அத்தகைய இடங்களுக்குச் செல்லமாட்டார்கள் என்று மனதில் எண்ணினேன். ஒரு கெளரவமற்ற பெண் (woman) அங்கு செல்லலாம், ஆனால் கெளரவமற்ற பெண் அங்கு செல்வதில்லை . பெண்களின் நெறிதவறுதலின் (immorlity) காரணமாகவே உலக வீழ்ச்சி தொடங்கினது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதே விதமாக அது முடிவு பெறும் என்பது உங்களுக்குத் தெரியுமா? - பெண்ணின் நெறிதவறல். ஸ்திரீ சபைக்கு அடையாளமாயிருக்கிறாள். ஆவிக்குரிய முறையில் சபையானது ஒரு ஸ்திரீ. அவ்வாறே ஒரு ஸ்திரீ மணவாட்டிக்கும் ஆவிக்குரிய விதத்தில் அடையாளமாயிருக்கிறாள். 65 இயேசு சீஷர்களிடம், "வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். என்னைக் குறித்தும் என் ஊழியத்தைக் குறித்தும் நீங்கள் குழப்பமடைந்திருக்கிறீர்கள். வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகின்றீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. என் செய்தி என்னவென்பதை அவைகள் உங்களுக்கு அறிவிக்கும். என்னை நீங்கள் விசுவாசியாவிட்டால் தேவன் என் மூலம் செய்யும் கிரியைகளையாவது விசுவாசியுங்கள்" என்றார் .. பரிசேயரோ, "இவன் எங்கள்மேல் அதிகாரம் செலுத்தவிட மாட்டோம். எங்களுக்கு எங்கள் ஆசாரியர்கள் இருக்கின்றனர்” என்றார்கள். அப்படியானால் உங்கள் வழிகளிலேயே செல்லுங்கள் என்று மாத்திரமே கூற முடியும். ஏனெனில் எப்படியாயினும் காலதாமதமாகிவிட்டது. "நீங்கள் செய்வது சரி” என்று ஸ்தாபன பாரம்பரியங்கள் கூறுவதையே அவர்கள் ஏற்றுக் கொள்வர். தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக மனிதனுடைய வார்த்தையை அவர்கள் விசுவாசிக்கின்றனர். 66 2தீமோத்தேயு 3 கூறுவதை அவர்கள் உணராமலிருக்கின்றனர். "மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும்,தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒரு போதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். 2தீமோ.3:1-7 67 ஓ, குருடான பரிசேயனே, உன்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லையா? எனக்குக் கோபமில்லை. நான் இதை ஆணித்தரமாகக் கூறி, அதை இறுகப் பற்றிக்கொள்ள முயல்கிறேன். சபையால் இதை உணர்ந்து கொள்ளமுடியவில்லை. ஸ்திரீகளும் அதை உணருவதில்லை. அவர்கள் பற்பல இச்சைகளால் இழுப்புண்ட மூடத்தனமான பெண்களாய் இருக்கின்றனர். அவர்கள் கிறிஸ்தவர்களுக்குத் தகாததாயுள்ள தலைமயிர் கத்தரித்தல், அரை கால்சட்டை அணிதல், ஆண்களின் கால்சட்டைகளை உடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த கடைசி நாட்களில் பெண்கள் முக்கியபாகம் வகிக்கின்றனர் . கர்த்தருக்கு சித்தமானால், என்றாவது ஒரு நாள் வரப்போகும் நியாயத் தீர்ப்பினின்று தப்பித்துக்கொள்ளப்போகும் பெண்களைக் குறித்து தேவனுடைய கருத்து என்ன என்பதை எடுத்துரைக்க விரும்புகின்றேன். அந்த தண்டனையின்றி தப்பித்துக்கொள்பவர் தேவனுடைய முன்னிலையில் அழகான கிளைகளாக இருப்பார்கள் என்று வேதம் கூறியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? 68 அன்றொரு நாள் நாயைவிட சீர்கெட்ட நடத்தையுள்ள அரை நிர்வாணியான சில பெண்கள் நீண்ட உடை உடுத்தியிருந்த முதிர்வயதான ஒரு அம்மாளைப் பார்த்து ஏளனம் செய்வதைக் கண்டேன். கர்வம் பிடித்த பெண்ணே , உனக்குத் தெரியாத ஒன்றை அந்த அம்மாள் பெற்றிருக்கின்றார்கள். அவர்களிடம் ஒழுக்கம் என்பது உண்டு. அது என்னவென்பதே உனக்குத் தெரியாதே? நீ தொட்டிலில் படுத்திருக்கும் போதே அதை இழந்துவிட்டாய். தவறுக்கும் சரியானதற்கும் உனக்கு வித்தியாசம் தெரியாது: அவர்களுக்கோ தெரியும். நீ அறியாத ஒன்று அவர்கள் இருதயத்தில் மறைந்துகிடக்கின்றது. அதை நீ இழந்துவிட்டாய்: இனி ஒரு போதும் அதை நீ திரும்பவும் பெறப்போவதில்லை, அவர்களை பழமை நாகரீகம் கொண்டவர்கள் (old-fashioned) என்று அழைக்காதே. ஒழுக்கம் என்னும் பொக்கிஷத்தை அந்த அம்மாள் இருதயத்தில் மறைத்துவைத்திருக்கின்றார்கள். உன் தாய் உன்னை ஒழுக்கங்கெட்டவளாக வளர்த்து விட்டாள். உன் போதகரும் அதற்கு அனுமதியளித்து விட்டார். அதன் மூலம் அவர் எப்படிபட்டவர் என்பது புலனாகின்றது. 69 யுந்நேயும் யம்பிரேயும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்த்து நின்றதுபோல, இந்த துர்புத்தியுள்ள மனிதர் சத்ததியத்துக்கு எதிர்த்து நிற்கின்றனர். தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக, ஸ்தாபனக் கோட்பாடுகளினாலும் போதகங்களினாலும் தங்களைக் கறைபடுத்திக் கொள்கின்றனர். மோசே செய்தவை யாவையும் யந்நேயும் யம்பிரேயும் செய்ய முடிந்தது. இவ்விரண்டும் இணையாயுள்ளதைக் கவனியுங்கள். அவர்கள் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கின்றனர். இந்த செய்தி சுற்றுவட்டாரத்தில் பிரசங்கிக்கபப்படுவதை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அதனுடன் அவர்கள் ஒத்துழைக்கவோ அல்லது எவ்வகையிலும் தொடர்பு கொள்ளவோ மறுப்பார்கள். ஆனால் அவர்கள் மூடத்தனம் ஒரு நாள் வெளியாகும். தேவனுடைய வார்த்தையில் நிலைநின்ற மணவாட்டி ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படும் நாளன்று அது வெளிப்படும். கவலைப்படவேண்டாம். மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் எகிப்தை விட்டு வெளியேறினபோது, எகிப்தியர்கள் சமுத்திரத்தில் மூழ்கி மாண்டது போன்று அது இருக்கும். வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியால் அருளப்பட்டன. எனவே அவையனைத்தும் வெளியரங்கமாகி, நிறைவேறவேண்டும். "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். 70 அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர் மேல் கல்லெறியும்படி கல்லுகளை எடுத்துக் கொண்டார்கள். 71 இயேசு அவர்களை நோக்கி நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்கு காண்பித்தேன். அவைகளில் எந்த கிரியையினிமித்தம் என் மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். 72 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன் மேல் கல்லெறிகிறதில்லை: நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்கிறபடியினால் உன் மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.  73 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க” யோவான் 10:30-35 74 அக்காலத்து யூதர்கள் வார்த்தைக்குப் பதிலாக மனிதனுடைய வார்த்தையினால் வசீகரிக்கப்பட்டு, அதை ஏற்றுக் கொண்டனர். அவ்வாறே இன்னும் ஸ்தாபனக் குழுக்கள் இயேசுவுக்குப் பதிலாக பேராயரை (bishop) ஏற்றுக் கொண்டுள்ளன. பணப்பையையும், அதிக அங்கத்தினர் கொண்ட குழுக்களையும் அவர்கள் கண்டு வசீகரிக்கப்படுகின்றனர் .என் பட்டினத்தில் எனக்கு எவ்வளவு செல்வாக்கு உண்டு என்பதை அறியவேண்டுமானால், வெளியிலிருந்து இங்கு வந்துள்ளோரை இக்கூடாரத்திலிருந்து நீக்கிவிடுங்கள். அப்பொழுது நான் ஆறு பேருக்குக்கூட பிரசங்கம் செய்யமாட்டேன். இது ஏன்? மணவாட்டி என்பவள் நாடு முழுவதிலுமிருந்து கொள்ளப்பட்டவர்களைக் கொண்டவளாயிருக்கின்றார்கள். அவர்கள் நியூயார்க், மசாசூசட்ஸ், மெயின், டென்னசி, ஜார்ஜியா, ஆல்பனி, இன்னும் மற்றெல்லாவிடங்களிலுமிருந்து இங்கு குழுமியுள்ளனர். ஆமென்."சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்." 75 நாற்பது ஆண்டுகளுக்கு முன்புதான் ருஷியா விஞ்ஞானத்துறையில் உலகப் புகழ் பெற்றது. முதலாம் உலக யுத்தத்தின்போது எல்லோரும் ருஷியாவை அசட்டை செய்தனர். அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நாம் அவர்களை இகழ்ந்தோம். அவர்கள் முகம் பூராவும் தாடியை வளர்த்த, பெரிய உருவம் கொண்ட சைபீரியர்கள் என்றும், வலது கைக்கும் இடதுகைக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாது என்றெல்லாம் நாம் கருதினோம். அது உண்மைதான். ஆனால் ருஷியாவோ அவள் வகிக்கவேண்டிய ஸ்தானம் என்னவென்பதை உணர்ந்து கொண்டாள். வேத வாக்கியம் நிறைவேற வேண்டுமென்பதற்காகவே அவள் அவ்விதம் செய்ய வேண்டியதாயிற்று. அவள் இன்று விஞ்ஞானத்தில் உலகிலேயே தலை சிறந்து விளங்குகின்றாள். நாம் ஏற்கனவே அவளுக்குப் பின்னணியில்தான் நிற்கிறோம். உலகம் அனைத்துமே அவளுக்குப் பின்னால்தான் இருக்கின்றது. அவளுக்கும் அறிவு உண்டு என்பதை அவள் அறிந்து கொண்டாள். 76 கவனியுங்கள் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே ஆறுபுலன்களையே மனிதன் இன்றும் பெற்றிருக்கின்றான். இப்புலன்களின் மூலம் மனிதன் தான் வாழும் ஸ்தலத்துடன் தொடர்பு கொண்டு தேவனை சேவித்து வந்தான். சென்ற 75 ஆண்டுகளாக மனிதன் அனேக சாதனைகளைப் புரிந்து, குதிரை வண்டியிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் அளவிற்கு முன்னேறிவிட்டான். ஏன்? அவன் தேவன் பேரில் கொண்டிருந்த விசுவாசத்தினின்று அகன்று மனிதனுக்குள் இருக்கும் திறனை உபயோகப்படுத்தத் தொடங்கிவிட்டான். அவன் தேவனை நம்புவதை விட்டு விட்டு, அவனையே நம்பத் தொடங்கி விட்டான். நமது இராணுவமும் கடற்படையும் உள்ளவரை நமக்கு யேகோவா அவசியமில்லை என்று அந்த நாத்தீக ஸ்திரீ கூறினாள். ஆனால் எதுயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. எனக்கு யெகோவாவைத் தவிர வேறொன்றும் வேண்டாம். இராணுவமும் கடற்படையும் மூழ்கட்டும்- அது நிச்சயம் சம்பவிக்கும்- ஆனால் யெகோவாவோ என்றென்றும் நிலைநிற்பார். நான் அவரில் ஓர் பாகமாகவும், அவருடைய குமாரனில் ஓர் பாகமாகவும் இருக்கும்வரை, நான் அவருடன் என்றென்றும் நிலை நிற்பேன். இது என்னுடைய தெரிந்துகொள்ளுதலினால் கிடைத்ததல்ல. அவர் என்னைத் தெரிந்து கொண்டதனால் கிடைக்கப்பெற்ற சிலாக்கியம் இது. ஆமென். கர்த்தரை எனக்குத்தாருங்கள். இல்லையேல் மரணத்தை எனக்குத் தாருங்கள். நாடுகள் எழும்பும். வீழ்ந்துபோகும். ஆனால் யேகோவா என்றென்றும் இருப்பார். அவர் எல்லா காலங்களிலும் இருப்பார். ரோமாபுரி வீழ்ந்தது. எகிப்து வீழ்ந்தது எல்லா வல்லரசுகளும் வீழ்ந்தன. ஆனால் அவரோ எப்பொழுதும் யெகோவாவாகவே இருக்கிறார். ஓ, அல்லேலூயா, நான் பக்தி பரவசமடைகிறேன். இஸ்ரேல் நாட்டைப் போன்று ருஷியாவும் தன் நிலைக்கு வந்துவிட்டாள் . எக்காளப் பண்டிகைக்காக தேவன் இஸ்ரவேலரை தங்கள் சொந்த நாட்டிற்கு விரட்டியடிக்க வேண்டும். அவ்வாறே உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்காக, தேவன் ருஷியாவை கம்யூனிஸக் கொள்கைக்கு கொண்டு செல்லவேண்டும். 77 தமது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முற்பிதாக்கள் நாட்டின் அரசியல் சட்டதிட்டங்களில் (constitution) கையெழுத்திட்ட போது, அவர்கள் எல்லா செயல்களிலும் தேவனுக்கு முதன்மை ஸ்தானம் அளித்தனர். ஆனால் இன்றோ அவருடைய நாமம் எங்குமே உச்சரிக்கப்படுவதில்லை. மனிதன் இன்று விஞ்ஞானத்தின் மகத்துவத்திலும், தந்திரத்திலும் சார்ந்திருக்கிறான். அவர்கள் நெறி தவறிய ஒரு கூட்டத்தார். உலகம் முழுவதுமே வேதாகம அறிவைப் பெற்றிராத நிலையில் உள்ளது. முழு உலகமே தேவனை விட்டு அகன்று சென்றுவிட்டது. ஆயினும், இதன் மத்தியலிருந்தும் தேவன் தம் வார்த்தைக்கென மணவாட்டியை வெட்டி யெடுத்துள்ளார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர் அவ்விதம் செய்வாரென்று வாக்களித்துள்ளார். அமெரிக்கா தேவனை விட்டுவிட்டது. அவர்கள் அவரைப் பள்ளிகளிலிருந்தும் கூடவிரட்டியடித்துவிட்டனர். இதன் விளைவாக சிறு பிள்ளகள் அவரைக் குறித்து கேள்விப்படவும் முடியாது. டாலர் நாணயத்தில் "நாங்கள் தேவன் பேரில் நம்பிக்கையாயிருக்கிறோம்" என்று எழுதப்பட்டுள்ளதையும் கூட அகற்றிவிட முயல்கின்றனர். நாட்டுப் பற்று வாக்குறுதியில், "தேவன் கீழ் ஒன்றுபட்டுள்ள நாடு” என்று எழுதப்பட்டுள்ளதையும் அவர்கள் எடுத்துவிடப் போகின்றனர். அவர்கள் தங்கள் உணர்ச்சிகளுக்கும், சுய அறிவுக்கும் திரும்பிவிட்டனர். கடந்து 75 ஆண்டு காலமாக மனிதனின் உருவ அமைப்பில் எவ்வித மாறுதலுமில்லை. ஆதியில் கர்த்தர் அவனைப் படைத்த விதமாகவே அவன் தோற்றமளிக்கின்றான் ஆனால் இந்த கடைசி நாட்களில் அவன் சுய அறிவின் பேரில் மாத்திரமே சார்ந்திருக்கிறான். 78 கடந்த 25 ஆண்டு காலமாக இஸ்ரவேல் ஜனங்கள் , தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேற வேண்டும் என்பதற்காக ஏதோ ஒன்று தங்களைத் தாய்நாடு கொண்டு சென்றுள்ளது என்பதை உணர்ந்திருக்கின்றனர். அது எப்படி நிகழ்ந்தது என்பது அவர்களுக்குப் புரியவேயில்லை . முத்திரையின் கீழ் அவர்கள் துன்புறுத்தப்பட்டு உயிர்த்தியாகமும் செய்தனர். ஆனால் இப்பொழுதோ அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் இருக்கின்றனர். எதற்காக அவர்கள் அங்கே குழுமியுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியாது. 79 ருஷியா ஏன் விழித்துக்கொண்டது? ஏனைய நாடுகளும் ஏன் விழித்துக் கொண்டன? மனிதன் எவ்விதம் இவைகளை சாதிக்கமுடிந்தது? 300 ஆண்டுகளுக்கு முன்னர், பிரான்சு நாட்டிலிருந்த ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சியின் மூலம், மனிதன் மணிக்கு 30 மைல்களை காட்டிலும் அதிக வேகம் சென்றால், ஈர்ப்பு சக்தியின்று விடுபட்டு மேலே பறப்பான் என்று கண்டுபிடித்தார். இன்று மனிதன் மணிக்கு 17000 மைல் வேகம் செல்கிறான், இதைக் காட்டிலும் அதிக வேகம் செல்ல முனைகிறான். சமீபத்தில் அவன் அவ்வளவு வேகம் செல்ல முடியும் என்பதைக் கண்டு பிடித்தான். ஏன்? அது அவ்விதம் நிகழ வேண்டும். 80 அதே சமயத்தில் மணவாட்டியும் சாயங்கால வெளிச்சத்தை அடையாளம் கண்டு கொண்டாள் பெந்தேகோஸ்தே ஸ்தாபனங்களிலுள்ள ஆத்தும பசி கொண்டவர்கள், அவர்களுக்குத் தேவையான எதுவும் அந்த ஸ்தாபனங்களில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டனர். இந்த ஸ்தாபனங்களில் சின்னபின்னமாயுள்ளன. இது ஒரு உணர்ந்துகொள்ளும் நேரமாக அமைந்துள்ளது. உலகம் உணர்ந்து கொண்டுள்ளது. நாடுகள் உணர்ந்து கொண்டுள்ளன விஞ்ஞானம் உணர்ந்து கொண்டுள்ளது. பிசாசும் உணர்ந்து கொண்டிருக்கிறான் பெண்களையும், சபையையும், மக்களையும் கொடுக்கவேண்டிய நேரம் இதுவே என்பதை அவன் உணர்ந்து கொண்டிருக்கிறான். தேவனும் நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்ட ஒரு கூட்டத்தார் உலகில் உள்ளனர் என்றும், அவருடைய செய்தியை அனுப்புவதற்கு ஏற்ற நேரம் இதுவே என்றும், உணர்ந்து, தமது செய்தியை இப்பொழுது அனுப்பியுள்ளார்.  81 மக்களும் இந்நேரம் என்னவென்பதை உணர்ந்துகொண்டிருக்கின்றனர், மணவாட்டி சாயங்கால வெளிச்சத்தை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறாள் .. சோதோம் மாத்திரம், பில்லிகிரகாம், ஒரல்ராப்ட்ஸ் போன்ற இரு தூதர்கள் அவளிடம் சென்ற போது , அவள் நேரத்தை அறிந்து கொண்டிருந்தால், இன்றும் அழியாது நிலைத்திருக்கும் என்று இயேசு கூறினார். 82 வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மகன் தோன்றுவான் என்று ஆபிரகாம் நன்கு அறிந்திருந்தான் . ஆனால் அது நிறைவேற சில மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். வாக்குத்தத்தம் செய்யப்பட்ட குமாரனைப் பெற்றுக்கொள்ள, அவனும் சாராளும் வயது சென்றவராயிருந்தனர் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் சாராள் கூடாரத்தின் பின்புறத்திலிருந்த போது, அவளுடைய சிந்தனையைப் பகுத்தறிந்த ஒருவரை அவன் சந்தித்த மாத்திரத்தில், அவனுடைய நேரத்தை அவன் உணர்ந்து கொண்டான். அவர்தான் ஏலோயிம். தேவன் மனித தேகத்தினுள் இருந்துகொண்டு அவனிடம் பேசுகிறார் என்பதை அவன் கண்டு கொண்டான். அவனுடைய அடையாளத்தை அவன் கண்டுகொண்ட காரணத்தால் , அவன் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டான். ஆனால் சோதோம் அவள் சந்திப்பின் நாளைக் கண்டு கொள்ளாததன் விளைவாக அழிக்கப்பட்டாள். சோதோமின் நாட்களில் நடந்ததுபோல, மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் நடக்கும் என்று இயேசு கூறினார். 83 சபையானது தன் நேரத்தை உணர்ந்துகொள்ளவில்லை. இஸ்ரவேலர் எவ்வாறு கட்டாயத்தினால் பாலஸ்தீனாவுக்குள் அனுப்பப்பட்டார்களோ, அவ்வாறே ஸ்தாபனங்களும் உலக சபை ஆலோசனை சங்கத்தினுள் கட்டாயமாக நுழைக்கப்படும். ஏன்? ஏனெனில் அவர்களின் நேரத்தை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஜனங்களே, அவளை விட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவங்களுக்கு உடன்பட வேண்டாம். 84 உங்கள் ஜீவன் தப்ப ஓடிப்போங்கள். இல்லையேல் அதில் சிக்கி மிருகத்தின் முத்திரையைத் தரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அப்பொழுது காலதாமதமாகியிருக்கும். அசுத்த மாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்,பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். அந்நாளிலே தலைமயிர் கத்தரித்துக் கொண்ட பெண்களாகிய நீங்கள் அது போன்றே இருப்பீர்கள். நான் வெளிப்படையாய் கூறுவது உங்களுக்கு கடினமாயிருக்கும். ஆனால் வேதம் அவ்வாறே கூறுகின்றது. மயிரைக் கத்தரித்துக் கொண்ட எந்தப் பெண்ணும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள் என்று வேதம் உரைக்கின்றது.கணவன் தான் அவள் தலை, கணவனுக்குத் தலை கிறிஸ்து. எனவே மயிரைக்கத்தரிப்பதன் மூலம் அவள் கிறிஸ்துவைக் கனவீனப்படுத்துகின்றாள் அவள் கனவீனமாய் இருந்து கொண்டு, எவ்விதம் அசுத்தமில்லாமல் இருக்கமுடியும்? அந்தநாளில் மயிரைக் கத்தரித்துள்ள பெண் அவ்வாறே இருக்கட்டும். அவள் அரை கால் சட்டை அணிந்திருப்பாளானால், அதை தொடர்ந்து அணியட்டும். நீ வார்த்தையை மறுதலிக்கிறவனாயிருந்தால், அதை தொடர்ந்து மறுதலித்துக் கொண்டே இருப்பாய். ஆனால் பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும். தேவனுடைய நீதியுள்ள வார்த்தையென்பது, வெளிப்படுத்தப்பட்ட தேவனாகும். 85 இஸ்ரவேல் எவ்வாறு பாலஸ்தீனாவுக்குத் திரும்பிச் சென்றாள் என்பது அவளுக்கே தெரியாது. அவள் தானாகவே அந்த ஸ்தலத்தில் திரும்பவும் பொருத்தப்பட்டாள். நான் இப்பொழுது ஒன்றைக் கூறப்போகிறேன்: அதை கூர்ந்து கவனியுங்கள். சர்வ தேச படைகள் இஸ்ரவேலை அவள் சுயநாட்டில் சேர்த்தன. அதுபோன்று சர்வ தேச சக்திகள் சபையை உலக ஆலோசனை சங்கத்தில் சேர்க்கும். ஆனால் தேவனுடைய வல்லமையோ தெரிந்து கொள்ளப்பட்டவர்களை மணவாட்டியினுள் சேர்க்கும். உலக சக்திகள் இவ்வழியிலும் அவ்வழியிலும் பக்கவாட்டாக சேர்க்கும். ஆனால் தேவனோ மேல் நோக்கி சேர்ப்பார். தேவ ஆவியானவர் - அது தேவனுடைய வார்த்தை ("என் வார்த்தை ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது”')- மணவாட்டியை அவளுக்குரிய இடத்தில் பொருத்துவார். அவளும் வார்த்தையிலுள்ள அவளுடைய ஸ்தானத்தை உணர்ந்துகொள்வாள்.அப்பொழுது அவள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறாள். எந்த சர்வதேச சக்தியும் இதை செய்யமுடியாது. சர்வதேச படைகள் தாம் இஸ்ரவேலை சுயநாட்டில் சேர்த்தன. உலக சபை ஆலோசனை சங்கத்தின் சக்திகள் எல்லா ஸ்தாபனங்களையும் அதனுள் சேர்த்துவிடும். ஆனால் தேவனுடைய வல்லமையோ மணவாட்டியை அதனின்று வெளியே கொணர்ந்து, மகிமைக்கு உயர்த்தும். 86 ஓ ஜனங்களே நீங்கள் வாழும் நாளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இயேசுவும் அவ்விதமே எச்சரித்திருக்கின்றார். இதனை கூர்ந்து கவனியுங்கள். சோதோமுக்குரிய அடையாளம் இந்நாட்களில் நிறைவேறும். சோதோம் அழிக்கப்படுமுன்னர் ஆபிரகாம் பெற்றுக்கொண்ட அடையாளம் போன்றது இது இந்நாளுக்கென்று உரைக்கப்பட்ட தீர்க்க தரிசனம் யாவும் நிறைவேறும். நீங்கள் வாழும் நாளைக் குறித்து கவனமாய் இருங்கள். 87 இந்நாளுக்குகென்று விதைக்கப்பட்ட வார்த்தையாகிய விதையை முதிர்வடையச் செய்ய பரலோகத்தினின்று வெளிச்சத்தை அனுப்புவாதாக தேவன் வாக்களித்துள்ளார். வார்ததை என்பது விதைக்கிறவன் விதைக்கும் விதையாகும். விளைச்சல் உண்டாகும் முன்பு, விதையை முதிர்வடையச் செய்ய வெளிச்சம் அவசியயமாயுள்ளது. இல்லையேல் அது அழுகி நாசமைடயும். அது நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையாக இருந்தது, போதிய சூரிய வெளிச்சத்தைப்பெற்றால், அது முதிர்வடைய வேண்டும். இக்கடைசி நாட்களில், விதையை முதிர்வடையச் செய்ய, சாயங்கால நேரத்தில் சூரிய வெளிச்சம் உண்டாகும் என்று தேவன் வாக்களித்துள்ளார். விதையானது இப்பொழுது பிரசங்கிக்கப்பட்டு வருகின்றது. தேவகுமாரன், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் உறுதிப்படுத்துவதன் மூலம், அந்த விதையை முதிர்வடையச் செய்து, அது வெடித்து உங்கள் முன்னிலையில் வளரும்படி செய்து, அது சரியென்பதை நிரூபித்து வருகின்றார் . உங்களுக்குப் புரிகின்றதா? உங்கள் நாளை நீங்கள் அடையாளம் கண்டு கொள்கின்றீர்களா? 88 ஐசுவரியமுள்ள, குருடரான, கல்வியறிவு படைத்த லவோதிக்கேயர் தேவனுடைய வார்த்தையை அவர்கள் நடுவினின்று விலக்கிவிடுவார்கள். அவ்வாறு அவர்கள் செய்யவில்லையா? அவர்கள் அவ்விதம் செய்வார்கள் என்று கிறிஸ்து உரைத்துள்ளார். அந்தந்த காலங்களுக்கென்று வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேவனுடைய வார்த்தையை உறுதிபடுத்துவதற்கென தீர்க்கதரிசிகள் வெவ்வேறு காலங்களில் அனுப்பப்பட்டனர். அந்தந்த காலங்களில் முன்குறிக்கப்பட்டவர்கள்- கிணற்றடியிலிருந்த சமாரிய ஸ்தீரி, நாத்தான்வேல், குருடனான பர்திமேயு, பேதுரு, அனேகர் - அதை உணர்ந்து கொண்டனர். அவரே அந்த வார்த்தை, அவர் இவ்விதம் கூறினார். "பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும் உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால் நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும் பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்” யோவான் 10:36-38 89 "நான் யாரென்பதை என் கிரியைகள் உங்களுக்கு அறிவிக்கின்றன" புரிகின்றதா? சரி அந்த நாளை நழுவவிடவேண்டாம் மற்ற காலங்களிலிருந்த ஆண்களும் பெண்களும் அதை அடையாளம் கண்டுகொண்டு, உள்ளே நுழைந்து, இரட்சிக்கப்பட்டனர் ஓ, பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தாராகிய நீங்கள் உங்கள் நாளை ஏன் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை? கர்த்தருடைய வருகையை உறுதிப்படுத்துவதற்கென அது வந்துள்ளது நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் உங்கள் காலத்தை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள் 90 அடுத்தபடியாக நிகழவிருப்பது என்ன? மணவாட்டியின் எடுத்துக் கொள்ளப்படுதல். ஏதோ ஒரு மகத்தான சம்பவம் நிகழ ஒவ்வொரு ஸ்தாபனமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தாரும், "கர்த்தருக்கு மகிமை! ஒரு நாள் வரும். அப்பொழுது நாங்கள் இதை செய்வோம், அதை செய்வோம்” என்கின்றனர். அவர்கள் கிறிஸ்தவமார்க்கத்தை மாத்திரம் தழுவினவர்கள். காய்பா தன் காலத்தில், "ஜனங்களெல்லாம் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனிதன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமல்லவா”? என்று தீர்க்கதரிசனம் உரைத்தது போன்றது இது. அவன் அக்காலத்து பிரதான ஆசாரியனாயிருந்தபடியினால், அவ்விதம் தீர்க்கதரிசனம் உரைத்தான் என்று வேதம் கூறுகின்றது. அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான் என்பது உண்மை . ஆனால் அதன் அர்த்தம் அவனுக்கே தெரியவில்லை. அவன் எந்த தேவனின் பிரதிநிதியாக பிரதான ஆசாரியனின் ஸ்தானத்தை வகித்தானோ, அதே தேவனை அவன் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறான் என்பதை மாத்திரம் அவன் அறிந்திருந்தால் இன்றைக்கு அது போன்றே உள்ளது. மகத்தான சமயம் ஒன்று வரவேண்டுமென்று அவர்கள் மேலே நோக்கிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் கிறிஸ்தவ வியாபாரிகளின் கூட்டங்களுக்குச் செல்ல நேர்ந்தால், அங்கே போதகர்கள், "ஒரு பெரிய எழுப்புதல் வரவிருக்கின்றது. தேவனுடைய கரம் இவ்வுலகின் மேல் வரும் அப்பொழுது ஜனங்கள் எல்லாவிடங்களிலும் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பார்கள்" என்றெல்லாம் பிரசங்கம் செய்து ஜனங்களைக் கலக்கிவிடுகின்றனர். இவையனைத்தும் எக்காளப் பண்டிகையின் கீழ் இஸ்ரவேல் நாட்டில் மாத்திரமே நிகழும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏன் இவ்விதம் செய்கின்றனர்? அவர்கள் கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவினவர் மாத்திரமே. காய்பா, தான் செய்வது என்னவென்று அறியாமலிருந்தான். அவ்வாறே இன்றுள்ளவர்களும் அவர்களுக்கென அனுப்பப்பட்ட செய்தியை புறக்கணிக்கின்றனர் என்பதை உணராமலிருக்கின்றனர். "குருடராகிய அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போனால், அவர்களை விட்டு விடுங்கள். குருடனுக்குகுருடன் வழிகாட்டினால் இருவரும் குழியில் விழுவார்கள்” என்று இயேசு கூறினார். அது எப்பொழுதும் நிகழும், எங்கு நிகழும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அது நிகழும் என்று மாத்திரம் எனக்குத் தெரியும். 91 இங்கிலாந்தில் வாழ்ந்த ஒரு நபரைக் குறித்த கதையொன்று என் நினைவுக்கு வருகின்றது. அவன் ஒரு சாதாரண மனிதன் அக்காலத்திலிருந்த அரசன் பகைவரைக் குறித்து ஒரு அவசர செய்தி அனுப்ப வேண்டியதாயிருந்தது. இந்த மனிதன் நின்று கொண்டிருப்பதை அரசன் கண்டான். அரசன் அவனை அழைத்து. "இந்த என் செய்தியை இன்னார் இன்னார் இடத்திற்க்கு கொண்டு சென்று, இன்னது இன்னது செய்ய வேண்டுமென்று கட்டளையிடு. என் செங்கோலை உன்னுடன் கொண்டு செல். நீ என்னால் அனுப்பப்பட்டவன் என்பதை அது உறுதிப்படுத்தும்” என்றான். அம்மனிதன் அந்த செங்கோலை அவன் உடைக்குள் மறைத்துக் கொண்டு, புறப்பட்டுச் சென்றான். காவற்காரர் அவனை வழி மறிக்கும் போதெல்லாம் அவன், "நான் அரசனின் செய்தியைக் கொண்டு வருபவன். வழி விடுங்கள். நான் ராஜாவின் தூதன்” என்று சொல்வான்... உறுதிப்பட்ட தேவனுடைய வார்த்தை. இச்செய்தியை நான் பிரசங்கிப்பது ஏன் சாத்தானுக்கு ஏன் விருப்பமில்லை என்பது இப்பொழுது தெளிவாகிவிட்டது நேற்று நான் சரியான நிலையில் இல்லை. தேவனிடத்திலிருந்து வார்த்தை ஒன்றையும் நான் பெறமுடியவில்லை. நான் எவ்வளவாக முயன்றும் பயனில்லை. இன்று காலை நான் படுக்கையை விட்டு எழுந்த போதே, எனக்கு களைப்பு தோன்றியது. நான் எனக்குள் . "என்ன நேர்ந்தது? நான் அங்கு செல்லவேண்டுமே என்ன பிரசங்கம் செய்யப் போகிறேன் என்று தெரியவில்லையே. ஆண்டவரே, குறித்துக்கொள்ள ஒரு வேதவாக்கியமும் கூட நினைவுக்கு வரவில்லையே” என்று கவலையுற்றேன் . என்ன செய்யவேண்டுமென்று ஒன்றுமே புரியவில்லை. ஆனால் சற்று கழிந்து இச்செய்தி எனக்கு வர ஆரம்பித்தது. அப்பொழு சாத்தான் என்னிடம் , "உன் உடல்நிலை சரியில்லை. உனக்குத் தலைவலி இருக்கின்றது உன்னால் முடியாது” என்று கூறிக்கொண்டே இருந்தான். அப்பொழுது நான், "சாத்தானே, வழியை விட்டு விலகு. நான் ராஜாவின் செயதியையுடையவன். நான் போக வேண்டும்" என்று அவனைக் கடிந்து கொண்டேன். ஒரு சமயம் அவர்கள் சமாதானப் பிரபுவைக் கொலை செய்து கல்லறையில் அடக்கம் செய்து, அதற்கு முத்திரையிட்டனர்.மரணம் அவரை மூன்று நாட்களாக இறுகப் பிடித்திருந்தது. ஆனால் ஈஸ்டர் காலையன்று அவர் கையில் செங்கோலை ஏந்தினவராய், மரணமே, அகன்று போ. கல்லறையே, அகன்று போ கல்லறையே, திற நான் ராஜாவின் செய்தியையுடையவராயிருக்கிறேன். உயிர்த்தெழுதல் உண்டு என்பதை நிரூபிக்க நான் உயிரோடெழ வேண்டும். நானே உயிர்த்தெழுதல்" என்று உரத்த சத்தமிட்டார். அல்லேலுயா அது ராஜாவின் செய்தி. நண்பர்களே, அதை நாம் உணர்ந்துகொள்வாமாக, எக்காளம் தொனிக்கப்படுவதற்கென, நாம் ஒன்று கூடுவதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றோம். ஆண்டவரின் எக்காளம் தொனிக்கும். அப்பொழுது காலம் இனி இராது. இஸ்ரவேலரை மூன்றாம் நாளில் கூட்டிச் சேர்ப்பதாக அவர் வாக்களித்திருந்தார்: அதை இப்பொழுது நிறைவேற்றி விட்டார். ஒளியின் பாதையை நமக்கு அறிவிப்பதாக அவர் கூறியுள்ளார். மணவாட்டி வழியினின்று விலகி, இரண்டு எபிரேய தீர்க்கதரிசிகள்-புறஜாதிகளல்லதோன்றுவதற்கு இஸ்ரவேல் காத்துக் கொண்டிருக்கிறாள். இவ்விரு தீர்க்கதரிசிகளும் வேதம் கூறியவாறே இருக்கவேண்டும். அவர்கள் திரும்பவும் வந்து தீர்க்கதரிசியின் அடையாளத்தைச் செய்வார்கள் என்று வேதம் உரைக்கின்றது. இஸ்ரவேல் தேசம் ஒரே நாளில் பிறக்கும். ஆமென். சாயங்கால வெளிச்சம் இப்பொழுது பிரகாசிக்கின்றது.  92 (சகோ . பிரானஹம் "it shall be light about the evening time” என்னும் பாட்டைப் பாடுகின்றார் - மொழிப் பெயர்ப்பாளர் ).  93 பவுலின் காலத்திலிருந்த மக்கள் உள்ளே சென்றால், என் ஜனங்களும் உள்ளே செல்வார்கள். ஏனெனில், பவுல் செய்தது எதுவோ, அதையே நானும் செய்திருக்கிறேன் என்று என் தரிசனத்தில் நான் கூறினதை நினைவில் கொள்ளுங்கள். அப்பொழுது இலட்சக்கணக்கானவர் கரங்களை உயர்த்தி. "அதனைச்சார்ந்துதான் நாங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்'' என்றனர் . நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகியிருக்கலாம். வெளியே இருப்பவன் வெளியே இருக்கட்டும், ஆனால் உள்ளே இருப்பவனோ இனி எப்பொழுதும் உள்ளே இருக்கவேண்டும் என்னும் நாள் வரப்போகின்றது. கதவு அடைபடும். அதற்குள் பிரவேசிக்காதவர் யாராகிலும் இக்காலையில் இங்கு இருப்பார்களானால், ஓ, இயேசுவின் நாமத்தில் உள்ளே பிரவேசியுங்கள். எனக்கு அருமையானவர்களே, இங்கு நின்றுகொண்டிருக்கும் படிப்பில்லாத ஊழியக்காரனை நீங்கள் பார்க்கவேண்டாம்... கல்வி அறிவு இல்லாதவன், படிக்காதவன்... அதை நீங்கள் பார்க்க வேண்டாம். நிரூபிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையைப்பாருங்கள். இது சத்தியம் என்று உறுதிப்படுத்தும் பரிசுத்த ஆவியானவரைப் பாருங்கள். நாம் சாயங்கால நேரத்தில் வாழ்கின்றோம். நீங்கள் நினைப்பதைக்காட்டிலும் தாமதமாகிவிட்டது.  94 ஸ்திரீகளே, உங்கள் தலைமயிரை வளரவிடுங்கள். சகோதரியே, தயவுசெய்து அந்த ஆபாசமான உடைகளைக் கழற்றி எறிந்துவிடு. உன் சிகரெட்டுகளையும் எறிந்துவிடு. ஏனெனில் "அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்” என்னும் நேரம் வரவிருக்கின்றது. உள்ளேயிருப்பவன் உள்ளேயிருப்பான். வெளியே இருப்பவன் வெளியே இருப்பான். அது மிகவும் குறுகலான ஒரு கோடாகும். நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும், பாவியும், சத்தியத்தை மறுதலிப்பவனும் எங்கே நிற்பான்?  95 நாம் தலைவணங்குவோம். விலை மதிக்கமுடியாத, அருமையானவர்களே, நாட்டின் பல்வேறு பாகங்களிலுமிருந்து இங்கு வந்துள்ளவர்களே, நாம் இப்பொழுது கணக்கு எடுப்போம் . இன்று பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களில் எவ்விதம் குடிகொண்டிருக்கிறார்? அது குற்றம் கண்டுபிடிக்கமுடியாத, ஸ்தாபன போதகங்களால் கறைபடாத ஆவியாக இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையுடன் நீங்கள் எதையும் கூட்டவோ அல்லது குறைக்கவோ தைரியப்படவேண்டாம். தேவனுடைய வார்த்தைக்கு உங்கள் சொந்த வியாக்கியானங்களை நீங்கள் அளித்தால், ஜீவபுத்தகத்திலிருந்து உங்கள் பாகம் எடுத்துப் போடப்படும். ஆவியானவர் கூறாத ஒன்றை நீங்கள் கூற முயல்கின்றீர்களா? அல்லது அவர் கூறியதை அவ்வாறே ஏற்றுக் கொள்கின்றீர்களா? நீங்கள் செய்திகள் ஒலிப்பதிவான ஒலிநாடாக்களைக் கத்தரித்து, பின்பு இணைத்து, இவ்விதம் நேர்மையற்ற செயல்களைப் புரிகின்றீர்களா? இதை செய்யவேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை அல்லது என் சபை இதை நம்புவதில்லை அல்லது அது ஒரு மனிதனின் வார்த்தை என்றெல்லாம் கூறுகின்றீர்களா? நீங்கள் குறிப்பிடும் அந்த மனிதன் தேவனாகும் அவர்தான் வார்த்தையை உரைக்கிறார் ஸ்திரீகளாகிய நீங்கள் மயிரைக் கத்தரித்துக் கொள்ளக்கூடாது என்று வேதம் உரைக்கின்றது ஸ்திரீகள் ஆண்களின் உடைகளை அணிவார்கள் என்றும் அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது என்றும் வேதம் கூறுகின்றது இந்த எளிய , ஒன்றுக்கும் உதவாத பாண்டத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் பேசினார். அந்த பாண்டம் அங்கு நின்றுகொண்டிருந்த போது, அந்த மகத்தான ராஜா அவரிடம். "இதோ, என் செங்கோல். நீ புறப்பட்டு சென்று என் செய்தியை அறிவிப்பாயாக” என்று கட்டளையிட்டார். ஸ்தாபனங்கள் அதை தடுத்து நிறுத்தி, புறக்கணித்து, விரட்டியடித்து, உதைத்து தள்ளும் என்று எனக்குத் தெரியும். ஆனால் தேவனுடைய கிருபையினால் நான் இடத்திற்கு இடம் சென்று, நாட்டிற்கு நாடு சென்று , சபைக்கு சபை சென்று, "அவளை விட்டு வெளியே வாருங்கள்” என்று கூச்சலிட்டு அறிவித்து, நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். அது பலரால் வெறுக்கப்படும் செய்தியாகும். ஆனால் அது சத்தியம். ஆவியானவரால் அறிவிக்கப்பட்ட இச்செய்தியை உங்கள் ஆவி ஏற்றுக்கொள்ளுமா? இங்கு பீடம் அமைக்க போதிய இடமில்லை. ஆனால் உங்கள் இருதயமே பீடமாகும். பரிசுத்த ஆவியை நீங்கள் இன்னும் பெற்றுக் கொள்ளாமலிருந்தால், உங்கள் கைகளையுயர்த்தி, "ஆண்டவரே, என் மேல் இரங்கும். பரிசுத்த ஆவி எனக்குள் வரட்டும். அவர் என் பாவங்களையும், வெறுப்புகளையும், கெட்ட பழக்கங்களையும், முன்கோபத்தையும் கண்டித்து உணர்த்துகின்றார் என் ஆவி பரலோகத்திற்கேற்ப சாந்த குணம் பொருந்தியதல்ல. ஆண்டவரே, இந்த கடைசி நேரத்தில் என்னை சாந்த குணமுள்ளவனாக்கும். ஒருக்கால் இதுவே நான் கேட்கும் கடைசி பிரசங்கமாக இருக்கலாம். இந்த எளிய உமது தாசன் வேண்டுதல் செய்வதும், நான் கேட்பதும் கடைசி முறையாக இருக்கலாம். என் கரங்களை நான் உயர்த்துகிறேன் கர்த்தாவே, என் மீது இரங்கும்” என்று சொல்வீர்களா? கர்ததர் உங்களை ஆசிர்வதிப்பாராக. 96 கைகளை உயர்த்தின உங்களுக்காக மௌன ஜெபம் எறெடுக்க விரும்புகிறேன். நீங்கள் இன்னும் அக்கறை கொண்டவர்கள் என்பதை உங்கள் உயர்த்திய கரங்கள் காண்பிக்கின்றன. பரிசுத்த ஆவியானவர் இன்னும் வேறு யாரையோ அழைக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. 97 அன்புள்ள தேவனே, எல்லாவற்றையும் அறிந்தவரே, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நோக்கத்திற்காக படைத்தவரே, சிலர் நியாயத்தீர்க்கப்பட வேண்டும். சிலர் குருடாக்கப்பட வேண்டும். குயவன் சில பாண்டங்களை கனத்திற்கும் வேறு சில பாண்டங்களை கனவீனத்திற்கும் வளைகிறான் என்று பவுல் கூறியிருக்கிறான். கனவீனத்திற்காக வளையப்பட்ட பாண்டங்கள், கனத்திற்காக வனையப்பட்ட பாத்திரங்களை வெளிப்படுத்தவே வளையப்பட்டன. குயவனுக்கு தன் சித்தப்படி வளைவதற்கு உரிமையில்லையா? அவ்வாறே அவர் முன்னறிந்தவர்களை அழைப்பது, தேவனுடைய முன் குறிப்பின் திட்டத்தில் அமைந்திருக்கவில்லையா? எவர்களை அவர் அழைத்தாரோ, அவர்களை அவர் நீதிமான்களாக்கியிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். இன்று வந்திருக்கும் சிலர் ஒருக்கால் கிணற்றடியிலிருந்த சமாரியா ஸ்திரியைப் போன்ற நிலையில் இருக்கலாம்... பாவ அழுக்கிலும், அவிசுவாசத்திலும், மனிதனால் ஏற்பட்ட போதகங்களின் பாரம்பரியங்களிலும் நிலைகொண்டிருக்கலாம். ஒருக்கால் முதன் முறையாக இவர்கள் இதை கேட்டிருக்கலாம். ஏதோ ஒன்று அதிசய விதமாக அவர்கள் இருதயங்களை அனல் மூட்டியிருக்கலாம். அந்த மகத்தான குயவன் அந்த பாண்டங்களை எடுத்து கனத்துக்குரிய பாண்டங்களாக வளையட்டும். நான் இன்னமும் நம்பிக்கையோடு அவர்களுக்காக மன்றாடிக் கொண்டிருக்கிறேன். ஜீவனுள்ளோருக்கும் மரித்தோருக்கும் இடையில் நிற்கும் ஒருவன் என்ற நிலையில், அவர்களுக்காக நான் மன்றாடட்டும். சோதோமிலிருந்த ஒருவாட் சோதோமியரிடம், "அதை விட்டு வெளியே வாருங்கள்” என்று வினவினது போன்று நானும் கூறட்டும். அவர்கள் தாழ்மையோடும் அன்போடும் உம் சிம்மாசனத்தண்டையில் வந்து, " இயேசுவே, இன்று முதல் நீர் என்னுடையவர். உமது ஆவியானவா ' இந்த ஆசனத்தில் நான் அமர்ந்திருக்கும்போது எனக்கு உணர்த்திக் காண்பித்தார். அதே ஆசனத்தில் அமர்ந்தவனாய் நான் இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். அதற்காக நான் வெகு தூரம் செல்லவேண்டிய அவசியமில்லை. நீர் என்னை சந்தித்த இந்த இடத்திலேயே நான் தீர்மானம் செய்யப் போகின்றேன். இங்கு தான் நீர் எனக்கு உணர்த்தினீர். இங்கு தான் நீர் எல்லாவற்றையும் சரிபடுத்துவதாக வாக்களித்தீர் . நான் அசுத்தமுள்ளவனாயிருந்தாலும், உறைந்த மழையைப் போல் வெண்மையாவேன். நான் உமது வார்த்தையை முழுவதுமாக விசுவாசிக்கிறேன். நான் அதற்குள் நடந்து, அதை விசுவாசித்து, அதை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறேன். என் வாழ்க்கை எனக்கும், தேவனுக்கும், அயலாருக்கும், மற்றவர்க்கும் உபயோகமற்றது என்பதை உணர்ந்தவனாய், இதை நான் தேவனுடைய மகிமைக்காக செய்கிறேன். பிசாசு என்னை ஒரு பொம்மை போல் ஆட்டி வைக்கவும், மற்றவர்கள் என்னைக் கண்டு மதிக்கவும், பெண்களின் அபிமானத்துக்கும் மாத்திரமே என் வாழ்க்கை இதுவரை அமைந்திருந்தது. ஆனால் இப்பொழுதோ என்னை உமது ஊழியக்காரனாக்கிக் கொள்ளும்” என்று வேண்டிக் கொள்ளுங்கள். அவர்களை உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன். ஆமென். 38